பக்கம் எண் :

பக்கம் : 3

 

தமிழியக்கக் காப்பியம்

 
     
 

பதிப்புச்செம்மல், தமிழவேள் ச. மெய்யப்பன்

 
 

செந்தமிழ் செழித்து வளரும் செட்டிநாட்டில் மேலைச்சிவபுரியில் கணேசர் செந்தமிழ்க் கல்லூரியில் நற்றமிழ் வளர்த்த நல்லாசிரியர்களிடம் கவியரசு முடியரசன் தமிழ்கற்றார். கவிதை மணம் கமழும் காரைக்குடியில் உயர்நிலைப்பள்ளியில் அறிஞர் தமிழண்ணலோடு இணைந்து தமிழைக் கற்பித்தார். மாணவர்களிடையே தமிழுணர்வு, தமிழார்வம், தமிழ்ப்பற்று தழைக்கச் செய்வதை வாழ்நாள் முழுவதும் கொண்டு திகழ்கிறார். அடிநாள் தொட்டு இனமான உணர்வு கொள்கையில் அசைவில்லாது உறுதி பூண்டவர். பாரதிதாசன் பரம்பரையில் குறிப்பிடத்தக்க ஐவரில் ஒருவர். அந்த வழித்தோன்றல்களில், வாழும் கவிஞர்களில் முதல் வரிசையர். நல்ல தமிழில் மரபுக் கவிதைகள் பாடி மாண்புகள் பல பெற்றவர். தூய தமிழில் தமிழின் தூய்மையைத் தொடர்ந்து பாடி வருபவர். தனித்தமிழில் தமிழ், தமிழர், தமிழ்நாடு பற்றி இவர் பாடிய பாடல்கள் பல்லாயிரம். இசைப்பாடல்கள்
பல இயற்றித் தமிழருக்குச் செவிநுகர்கனிகள் பல தந்த முத்தமிழ்க் கவிஞர் இவர். தமிழியக்க வேர்களாகிய மறைமலையடிகள், பாவாணர், மாணிக்கனார் வழியில்
தோன்றிய தமிழியக்க விழுது இவர். தமிழியக்க நெறிகளில் தமிழ் மீட்சி, தமிழைக்