3. பூங்கா புக்க காதை |
பூங்கொடி அழுகை |
|
| தேன்மொழிக் கருண்மொழி செப்பிய துயருரை ஆன்றரு பாலெனும் அருட்பா திளைத்திடும் பூங்கொடி செவியிற் புகுந்தது; புகுதலும் ஓங்கிய பெருவளி உற்றிடு துகிற்கொடி | |
| படபடத் தாலெனப் பதைத்தனள் நெஞ்சம்; மடமை யகற்ற மனங்கொளீஇ நிலத்துக் கடமை யாற்றுழிக் கைதவ மாந்தரால் பெற்றோ ரீங்குப் பட்டவெந் துயரால் உள்ளிற் புண்ணாய் உருகிய குருதி | 5 |
| வெள்ளப் புனலாய் விழிவழி வழிந்தது; கண்ணீ ரிடைவிரி கருவிளை மலரென எண்ணும் படிக்கிரு கண்களும் இலங்கின; சுமையாய்த் துயரம் சுமந்திடற் கியலா அமயத் திருப்போர் அழுதிடல் இயல்பே; | 10 |
| அழுதிடல் ஏனெனின் அப்பெருந் துயரைக் கழுவும் ஆற்றல் கண்ணீர்க் குளதென நம்புவர்; அதனால் நலிவுங் குறைகுவர்; பூங்கொடி தனக்கோ பொங்கிய துயரம் நீங்கிற் றிலது நெஞ்சம் விம்மத் | 15 |
| தேம்பித் தேம்பித் தெரிவை அழுதனள்; | 20 |
| | |
பூங்கொடி அழுகையை அருண்மொழி மாற்றுதல் |
| | |
| பூங்கொடி கண்ணீர் புத்தகம் நனைத்திட ஆங்கது கண்ட அருண்மொழி வெதும்பிக் | |
--------------------------------------------------------------- |
| ஆன் - பசு, அருட்பா - திருவருட்பா, பெருவளி - பெருங்காற்று, கொளீஇ - கொண்டு, கைதவம் - வஞ்சகம், உள் - மனம். | |
| | |