| | உழைப்பினை உதவுக | | | | | | கோவிலில் தமிழொலி குடிபுக வேண்டி | | | மேவிய விருப்பால் மேலோர் சிலரோடு ஒல்லும் வகையால் உழைத்தும், ஊர்தொறும் சொல்லியும் வருதல் தொழிலெனக் கொண்டுளேன்; அச்செயல் ஆற்ற அரிவையர் சிலரும் நச்சின ராகி உழைப்பினை நல்கின் | 95 | | மெச்சிடும் வெற்றி மேவுதல் திண்ணம், என்றனர் யானும் எழிற்பூங் கொடியும் ஒன்றிய உணர்வால் ஒப்புதல் தந்தோம்; சென்றுநீ தாய்க்கும் பிறர்க்கும் செப்'பெனச் | 100 | | சென்றனள் தேன்மொழி செயலற வுற்றே. | 104 | | | | | |
|
|