| பகுத்தறி வூட்டும் பகலவன் ஆவர்; | |
| சொல்லின் செல்வர், சோர்விலர், தொண்டர், அல்லும் பகலும் ஆருயிர்த் தமிழே வெல்லும் வகையால் வீரம் விளைத்தவர்; நல்லவர் இவரை நரிக்குணம் விஞ்சிய கொல்லும் பகைக்குணம் கொண்டோர் ஒருசிலர் | 70 |
| தூண்டுதல் செய்யத் துணிவுடன் கூடி நீண்ட புளிமரக் கிளைதனில் நேயரை அந்தோ தூக்கி ஆருயிர் வவ்வினர்; இந்தவெந் நிலையில் இசைத்தொழில் புரிவதோ? | 75 |
| | |
| மலையுறை அடிகள் வருகை தருதல் | |
| | |
| வெந்துயர் வாட்ட வேலரின் நினைவால் | |
| மனநலி வெய்தி மனையுறை நாளில், நினையா நிலையில் நீளருட் செல்வர் மலையுறை யடிகள் வந்துநின் றருளினர் துயரம் நீங்கச் சொற்றனர் சிலசொல்; | 80 |
| | |
| அடிகளார் அறிவுரை | |
| | |
| `மாதே! பிறப்பும் மாய்வும் இயற்கை; | |
| யாதே முயலினும் தடுத்திடல் அரிதே! பெறலருங் கொழுநன் பிணியால் மாண்டிலன் பிறரெவ ரும்பொறாப் பெருநிலை பெறவே ஆருயிர் ஈந்தனன் அவனோர் வீரன்; வீரப் பெருமகன் விடுபணி தொடர்ந்து | 85 |
| புரிந்தனி ராயின் பொருந்திய துயரம் முறிந்திடும்; அவனுளம் நிறைந்திடும் ஆதலின் முயன்றுறு செல்வம் முத்தமிழ்க் கல்வி உயர்ந்திட உதவுக, உழைப்பும் நல்குக, | 90 |
--------------------------------------------------------------- |
| விஞ்சிய - மிகுந்த. | |
| | |