| கலப்பு மணத்தைக் கடிந்துரை யாடினர்; கலைத்தொழில் புரிந்தேன் கற்பினைப் பழித்தனர்; மலைத்திலேன் சிறிதும், மனமுங் கூசிலேன்; | 45 |
| | |
| வள்ளி குறிக்கோள் வாழ்வினள் | |
| | |
| அவர்முதன் மனையாள் அரும்பெறல் வள்ளி, எவர்துயர்ப் படினும் எழுந்துடன் சென்று | |
| துன்பம் நீக்கலில் இன்பங் கொள்வாள்; என்பும் பிறர்க்கே எனுங்குறி வாழ்வினள்; பொதுநலத் தொண்டே புந்தியிற் பதித்தவள்; எதுசரி எனமனம் ஏற்குமோ அதனைத் துயர்பல நேரினும் துணிவுடன் ஆற்றும் | 50 |
| அயர்விலாக் கணவர் அரும்பணிக் கியைந்தவள்; அடிமை வாழ்வில் அருவருப் புற்று விடுதலை வேட்டு வீறுற் றெழுந்த நல்லவன் ஒருவனை நாய்மகன் சுடுங்கால் ஒல்லென ஓடி ஒப்புயர் வில்லாள் | 55 |
| தன்னெஞ் சேற்றுத் தான்மடிந் தனளே! | 60 |
| இசைத்தொழில் புரியும் இவள்இத் தொழிலை வசைத்தொழில் என்று வெறுத்திடல் என்கொல்? | |
| | |
| வள்ளியின் மகளே பூங்கொடி | |
| | |
| வன்னெஞ் சினர்அவ் வள்ளியின் வாழ்வை இகழ்ந்ததும் அறிவேன்; என்வயி றீன்ற மகளே யாயினும் வள்ளியின் மகளே பூங்கொடி என்று பொருந்தினேன் ஆதலின் | |
| ஆங்கவள் தன்னை இசைத்துறை அறுத்துப் பாங்குடன் பொதுநலப் பணிக்கே ஆக்கினென்; | 65 |
| | |
| வடிவேல் படுகொலை | |
| | |
| ஆங்ஙனம் அன்றியும் அரும்பெறற் காதலர் நிலத்தினில் மடமை நிறைந்திடல் கண்டு | |
--------------------------------------------------------------- |
| என்பு - எலும்பு, புந்தி - மனம், இயைந்தவள் - பொருந்தியவள். | |
| | |