| நசையுடன் ஆய்ந்து நம்தமிழ் இசைக்கே ஆக்கம் தந்தவள்; அரியதோர் இசைப்புனல் தேக்கிய கலைக்கடல்; தெள்ளிய இசையால் உலகை வென்றவள்; உயர்ந்தவள் குரலால் | |
| குழலும் யாழும் கொட்டம் அடங்கின; | 25 |
| பாடும் முறையாற் பாவை பாடுவாள்; ஆடாள், கோணாள், அங்கக் குறும்புகள் நாடாள், அந்த நல்லிசைச் செல்வி வாயிதழ் விரியின் வானிசை கேட்கும்; | |
| சேயிதழ் மலர்க்கை தாளச் சீர்இடும்; | 30 |
| அன்னவள் காணா அரங்கம் இல்லை; பொன்மிகக் குவித்தாள் புகழோ மிகுத்தாள்; | |
| | |
| ஊரார் பழிமொழி | |
| | |
| இசைத்தொழில் புரியும் இவள்இத் தொழிலை வசைத்தொழில் என்று வெறுத்திடல் என்கொல்? | |
| செருக்கினள் கொல்லோ? செல்வம் மிகவாப் | 35 |
| பெருக்கினள் கொல்லோ? என்றுரை பேசி ஏளனம் செய்தனர்' என்ற தேன்மொழிக்கு | |
| | |
| அருண்மொழி அலருக்குக் கூசாமை | |
| | |
| அருண்மொழி நகைத்தனள் அருளினள் சிலசொல்; `பொதுப்பணி புரிவோர் புகழ்வும் இகழ்வும் | |
| நினைத்திடல் வேண்டும் ஒருநிகர் எனவே; ஆருயிர்த்தோழி! அந்நாள் வடிவேற் பேருடைச் செம்மலைப் பேணிஎன் காதற் கொழுநர் என்று கொண்டபின் ஊரார் இழிசொல் எத்துணை ஏசினர் அறியாய்? | 40 |
--------------------------------------------------------------- |
| நசை - விருப்பம், கொட்டம் - செருக்கு, நாடாள் - விரும்பாள், வானிசை - உயர்ந்த இசை, செம்மல் - சிறந்த ஆடவர், கொழுநர் - கணவர். | |
| | |