| கோட்டமில் மனத்தாய்! குக்கலின் செயல்போல் | 95 |
| இலக்கண நூலை இழித்தும் பழித்தும் குரைத்தால் அவர்தம் கொட்டம் அடக்கு! | |
|
பொருள்நூல் உணர்த்தல் |
|
| தொல்காப் பியமெனும் ஒல்காப் பெருநூல் நல்கிய தாய்மொழி நாளும் வாழிய! | |
| எழுத்தின் இயலும் சொல்லின் இயலும் | 100 |
| வழுக்களைந் துணர்ந்தனை! வாழ்வியல் கூறும் அகம்எனப் புறம்என வகைபெறு பெருநூல் உலகிற் பிறமொழி உரையாப் பொருள்நூல் திறமுனக் குணர்த்துவென் செவ்விதிற் கற்பின் | |
| அறிவுரம் பெறுமே, ஐவகை இலக்கணம் | 105 |
| உணர்வார் மொழியில் உயர்வார்' என்று துணர்மலர்க் கொடிக்குத் தொல்காப் பியநூல் முழுமையும் ஓதி முடித்தனள் தாமரை | |
| விழியாள் கொடிபால் விடைபெற் றனளே. | 109 |
--------------------------------------------------------------- |
| கோட்டம் இல் - குற்றம் இல்லாத, குக்கல் - நாய். ஐவகை இலக்கணம் - எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி; துணர் - கொத்து, தாமரை விழியாள் - தாமரைக்கண்ணி. | |
| | |