பக்கம் எண் :

பக்கம் :78பூங்கொடி

  நிலவிய பொதுப்பணி நேர்வோர் தமக்குத்
தடையாம் இல்லறம் தவிர்ந்தேன்; நெஞ்சுரம்
உடையார் எந்தை உழைத்தஅப் பணியே
 
  தலையாக் கொண்டேன் தையால்! மணஞ்செயின் 25
 

குடும்பக் கவர்ச்சி

 
  உலைவாய்ப் பட்ட இரும்பென உருகி
வளைந்து நெளிந்து வாழ்தல் வேண்டும்;
குழந்தை கணவன் குடும்பம் என்றெலாம்
எண்ணம் விரியும், இடும்பைகள் பெருகும்;
 
  தன்னல மறுப்பெனும் நெருப்பினுள் மூழ்க 30
  உன்னுங் காலை உளந்துணி யாதே!
அன்னாய்! அதனால் துறந்தனென் இல்லறம்;
 
 

கடல்நகர் வந்தமை கூறல்

  இயல்பினில் வாய்த்தது இத்துற வுள்ளம்,
மயலொரு சிறிதும் இல்லேன்; மலையுறை
 
  அடிகள் குறளகம் அண்டினேன், உய்ந்தேன்; 35
  கடிகமழ் தாமரைக் கண்ணிதன் துணையால்
இந்நகர் வந்திவண் இறுத்தனென், அதன்றலைப்
பன்னரும் பெருமைப் பழந்தொல் காப்பியப்
பொருள்நூல் உணர்ந்தேன்; புகன்றேன் என்னிலை;
 
  அருள்விழி! நீயார் அறை'கென மொழிதலும், 40
     
 

மூதாட்டி தன் வரலாறுரைத்தல்

 
     
  வந்தவள் மகிழ்ந்துதன் வரலா றுரைக்கும்;
`முந்திய தமிழ்மொழி தந்தநல் இலக்கியச்
செல்வம் பற்பல சிதைந்தும் குறைந்தும்
புதைந்து கிடப்பவை புகுந்து புகுந்துஅப்
 

---------------------------------------------------------------

  உய்ந்தேன் - பிழைத்தேன், கடிகமழ் - மணங்கமழும், இறுத்தனென் - தங்கினேன், அதன்றலை - அதன்மேலும், பன்னரும் - கூறஇயலாத.