பக்கம் எண் :

பக்கம் :8

  பாவேந்தர் பாரதிதாசனால், `தமது மூத்த வழித் தோன்றல் இவர்தாம்' எனப் போற்றப்பட்டார். பேரறிஞர் அண்ணாவால் "திராவிட நாட்டின் வானம்பாடி" என அழைக்கப்பட்டார்.
        1949ஆம் ஆண்டு பேராசிரியர் மயிலை சிவமுத்து அவர்களின் சீரிய தலைமையில் கலைச்செல்வி என்னும் நலத்தகையாரைக் கலப்புத் திருமணம் செய்து கொண்டார்.
 
          அப்பொழுது நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தனியாக எதிர்ப்பதைக் காட்டிலும் துணையோடு சென்று எதிர்ப்பதுதான் வெற்றிக்குரிய போராட்டமுறை என்பதனால் தக்க துணையோடு (துணைவியாரோடு) ஈடுபட்டார்.  
          திருமணம் முடிந்த பின்னர்ச் சென்னையிலிருந்து விலகி வந்து காரைக்குடியில் மீ. சு. உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராக அமர்ந்து 28 ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார். "ஆணும் பெண்ணும் சரிநிகர்" என்ற பாரதியின் வாக்கை நிலை நிறுத்துவது போல் குமுதம், பாரி, அன்னம், குமணன், செல்வம், அல்லி என மகள்மார் மூவரையும், மகன்மார் மூவரையும் பிள்ளைச் செல்வங்களாகப் பெற்றுள்ளார்.  
          1955ஆம் ஆண்டில் குருதி உமிழும் கொடு நோய்க்கு இலக்கானார். `பிழைப்பது அரிது' என்ற நிலை வந்துற்ற போது புதுக்கோட்டை அண்ணல் சுப்பிரமணியனார் தாயினும் சாலப் பரிந்தெழுந்து, நோய் நீங்கி நலம் எய்த மருத்துவர் வி.கே. இராமச்சந்திரனார் துணையோடு எல்லா வகையானும் உதவி புரிந்தார். அவ்வுதவி இயம்பத் தீரா ஏற்றமுடையது, புத்துயிர் கொடுத்த அவ்வித்தகரைத் தந்தையாகவே கருதி வருகிறார் கவிஞர். காலத்தினால் செய்த ஞாலத்தின் பெரிதாகிய அவ்வுதவியை நாடொறும் எண்ணி உருகுகின்றார்.
        1962இல் சென்னை சென்று திரைப்படத்துறையில், "கண்ணாடி மாளிகை" என்ற திரைப்படத்திற்கு வசனம், பாடல்கள் எழுதினார். எனினும் திரைப்படத் துறையில்