பக்கம் எண் :

நா. பார்த்தசாரதி193

நேரம் அறிவிக்கப்பட்டது. ஏறக்குறைய இரண்டு மணி நேரத்திற்கு மேல்
இந்திய நேரத்திற்கும் அதற்கும் வித்தியாசமிருந்தது. பிரயாணிகள் உடனே
கைக்கடிகாரங்களைச் சரிசெய்து கொண்டார்கள்.

     விமானம் சிங்கப்பூர் விமான நிலையத்தில் இறங்கியது. மீனம்பாக்கத்தில்
புறப்படும்போது உதவி செய்தது போலவே முத்துக்குமரன் ஸீட் பெல்ட்டைக்
கட்டிக் கொள்வதற்கு மாதவி உதவி செய்தாள்.

     சிறிதும் பெரிதுமாக அந்த நிலைய ரன்வேயில் அங்கங்கே நின்ற
விமானங்களைப் பார்த்தபோது ஒரே பிரமிப்பாயிருந்தது. அபிமான
நட்சத்திரங்களைப் பார்க்க நிலையத்தின் உள்ளேயும் வெளியேயும்
பால்கனியிலும் கூட்டம் கூடியிருந்தது. அப்துல்லா வரவேற்றார். ஏராளமான
மாலைகள். விமான நிலைய லவுஞ்சிலே மாதவியும் கோபாலும் டெலிவிஷனுக்கு
ஓர் இண்டர்வ்யூ கொடுத்தனர். ரசிகர்கள் ஆட்டோகிராப் வேட்டைக்கு
மொய்த்தனர்.

     முத்துக்குமரனுடைய பெயரோ வருகையோ அதிகமாக
விளம்பரப்படுத்தப்படாததால் மாலை, வரவேற்பு, தடபுடல் கூட்டம் எல்லாம்
கோபாலைச் சுற்றியும் மாதவியைச் சுற்றியுமே இருந்தன. முத்துக்குமரனும்
அதைத் தவறாக நினைக்கவில்லை. தன்னை உலகுக்கு விளம்பரப்படுத்திக்
கொள்ளாதவன் தடபுடலான வரவேற்பை எதிர்பார்ப்பது நியாயமில்லை
தானென்று தோன்றியது அவனுக்கு. நட்சத்திர அந்தஸ்துப் பெற்றவர்களுக்கு
உள்ள ‘கிளாமர்’ இப்போதுதான் பட்டினத்துக்கு வந்து கோபாலின் தயவில்
நாடகம் எழுதத் தொடங்கியிருக்கும் தனக்கு - அதுவும் அந்நிய தேசத்தில் -
இருப்பதற்குக் காரணமில்லை என்பதை அவன் உணர்ந்தான். ஆனால்
தனதுதோற்றப் பொலிவின் காரணமாகத் தன்னையும் ஒரு நடிகனைப்
பார்ப்பதுபோல் எல்லாரும் உற்று