| ஜீவ, | | குழந்தாய்! குழந்தாய்! கொன்றேன் நின்சீர்! |
| நாரா, | 45. | இழந்தா லிருப்பளோ? என்செயத் துணிந்தாய்? ஜீவ, நஞ்சே யெனக்கியான்! என்செய் வேனினி! இருதலைக் கொள்ளியி லெறும்பா னேனே! செருமுகத்து இரிந்தென் மானஞ் செகுத்தும் உயிரினை யோம்பவோ வுற்றது? ஓர்சிறு |
| 50. | மயிரினை யிழக்கினு மாயுமே கவரிமா. பெருந்தகை பிரிந்தும்ஊன் சுமக்கும் பெற்றி மருந்தா யெனக்கே யிருந்ததே நாரணா ! | | |
| | நாரா, | | மன்னவ ! யார்க்குந் தன்னுடல் மாய்த்தல் அரிதோ? பெரிதாம் அஞர்வந் துற்றுழிக் |
| 55. | கருதிய தமரைக் காட்டிவிட் டோடி யொளிப்பதோ வீரமென் றுன்னினை? |
| | போரிடை யோடுவோன் வீரம்நா டுவனோ? |
| நாரா, | | காலமுங் களமுங் கண்டு திரும்புதல் சாலவும் வீரமே. தக்கவை யுணருந் |
| 60. | தன்மையில் சௌரியம் மடமே. சூழ்ச்சிசேர் வன்மையே வீரத் துயிராம் மன்னவ! |
| ஜீவ, | | போதும்! போதுநின் போலி நியாயம்! சாதலுக் கஞ்சியோர் தனையளுக் காகச் சூதக வுடம்பைச் சுமக்கத் துணிந்தேன். |
| 65. | மன்னனு மல்லன். வழுதியு மல்லன்! |
| (சேவகரை நோக்கி) | | என்னுட னிருமின்! ஏன்நிற் கின்றீர்? |
| | யிசைப்பது வசையே. இஃதோ காண்மின்! அசைந்த தொருநிழல் அஃதே யானெனப் |
| 70. | பாருமின், பாண்டியன் போரிடைப் பட்டான். |
|
|
|