பக்கம் எண் :

மனோன்மணீயம்
114

ஜீவகன்.20.

கெடுத்தே னையோ ! கெடுத்தேன் ! நாணம்
விடுத்துயி ரின்னும் வீணில் தரித்தேன்.
ஆ! ஆ! என்போல் யாருளர் வீணர்!
யாருளர் வீணர்! யாருளர்! யாருளர்!
பாண்டியன் றொல்குலம் பட்டபா டின்றுமற்

25.

றிதுவோ! இதுவோ! மதிவரு குலமே!
மறுவறு நறவே! மாசறு மணியே!
அழியாப் பழிப்புனக் காக்கவோ வுனது
வழியா யுதித்தேன் மதியிலா யானும்!
அந்தோ! இந்து முதலா வந்த

30.

முன்னோர் தம்மு ளின்னார்க் கிரிந்து
மாண்டவ ரன்றி மீண்டவ ருளரோ!
யாதினிச் செய்குவன்! ஐயோ பொல்லாப்
பாதகன் மக்களுள் வெட்கமில் பதடி. (பற்கடித்து)
போர்முகத் தோடிப் புறங்கொடுத் தேற்குக்

35.கார்முக மென்செய ! கடிவா ளென்செய !

(வில்லும் வாளு மெறிந்து)

ஓ ! ஓ ! இதனா லுண்டோர் பெரும்பயன்.

(மறுபடியும் வாளை எடுத்து நோக்கி நிற்க,
சேவகரோடி வர)

போ ! போ ! வெளியே போரிடைப் பொலியாது
வாளா விருந்த வாளுக் கீதோ (நாராயணன் வர)
எனாதுயி ரீவன். வினவுவர் யாவர்?


நாரா,40.

மனோன்மணி தன்னை மறந்தாய் போலும் !


ஜீவ,குழந்தாய்! குழந்தாய்! -

(விழுந்து மூர்ச்சிக்க)


சேவகர்.

கொற்றவ ! கொற்றவ !


நாரா, பேசன்மின் !

(அரசனை மடியிற் றாங்கி)


முதற்சேவ,

பேசன்மின் !


நாரா,

வீசுமின்! அகன்மின்!


முதற்சேவ,வெளியே!

4-ம் சேவ,

பனிநீர் -