பக்கம் எண் :

மனோன்மணீயம்
113

நான்காம் அங்கம்

3-வது களம்

இடம் : அரண்மனையிலொரு சார். காலம் : நண்பகல்
ஜீவகன் தனியாய்ச் சோர்ந்து கிடக்க : சேவகர் வாயில்காக்க.

(நேரிசை ஆசிரியப்பா)


முதற்சேவகன்.

செய்வதென்? செப்பீர். கைதவற் கியாமோ
ஆறுதல் கூறுவம்?


2-ம் சேவகன். 

கூறலும் வீணே !

பெருத்த துயரிற் பேசுந் தேற்றம்
நெருப்பிடை நெய்சொரிந் தற்றே யென்பர்.


3-ம் சேவ,5.

பணிந்தியா மருகே நிற்போ மன்றித்
துணிந்துமற் றதுதான் சொல்லுவர் யாவர்?


4-ம் சேவ, நாரா யணரேல் தீரமாய் மொழிவர்.

3-ம் சேவ, மெய்ம்மை! மெய்ம்மை! விளம்புவர் செம்மையாய் !

முதற்சேவ,எங்குமற் றவர்தர மேகினர்? உணர்வைகொல்?

4-ம் சேவ,10.மங்கைவாழ் மனைக்குநே ரோடுதல் கண்டேன்.

2-ம் சேவ,சகிப்பளோ கேட்கில் தமியள்-

3-ம் சேவ, 

ஆயினும்,

மகளா லன்றி மன்னவன் தேறான்.
அதற்கே சென்றர் போலும். ஆ ! ஆ !


2-ம் சேவ,நாரா யணரே நன்மதி யுடையோர்.

4-ம் சேவ,15.

பாரீர் ! இன்றவர் பண்ணிய சாகசம்.
இன்றியாம் பிழைத்ததிங் கிவரால். அன்றேல்-
(ஜீவகன் எழுந்து நடக்க)


3-ம் சேவ,அரச னஃதோ வெழுந்தான் காணீர்.

முதற்சேவ,

உரைதரு கின்றான் யாதோ? ஒதுங்குமின்.
அடுத்திவ ணிற்பீர். அமைதி ! அமைதி !