பக்கம் எண் :

மனோன்மணீயம்
112

நாரா,

வருவது முருகன் போலும். முருகா! (முருகன் வர)


(படைவீரரை நோக்கி)

 

125.

வயப்பரி வீரரே ! மன்னவர்க் கபஜயம்,
இமைப்பள வின்க ணெய்தினு மெய்தும்,
இம்மெனு முன்னநா மெய்துவோம் வம்மின் !
முதற்படை,, வந்தன ரீதோ மற்றைய வீரரும்.
நாரா,தந்தன முனக்கவர் தலைமை. நொடியில
130.

வலப்புறஞ் செலுத்துதி. மன்னவன் பத்திரம்.
இருபுறங் காக்குதும். வருகவென் னருகே !


(முருகன் காதில்)

குடிலனை நம்பலை.


முதற்படை,

அடியே னறிவேன்.


நாரா, 

அறிந்தவா றாற்றுதி ! மறந்திடேல் மெய்ம்மை !
வம்மின் வீரரே ! வம்மின் !

135.உம்வயி னுளதுநஞ் செம்மல துயிரே.

(யாவரும் விரைவாய்க் குதிரைமேற் செல்ல)


நான்காம் அங்கம் : 2-ம் களம் முற்றிற்று.