| | முற்றுநா னறிவன்நின் குற்றமுங் குணமும். குற்றமற் றென்னுள கூறற் குன்வயின்? வித்தையு முன்பெருஞ் சத்திய விருப்பமும் உத்தம வொழுக்கமு மெத்துணைத் தையோ ! |
| 105. | வறிதாக் கினையே வாளா அனைத்தும் அறியா தொருவனை யமைச்சா நம்பி ! இன்னதொன் றன்றிமற் றென்பிழை யுன்னுழை? மன்னவன் நல்லனா வாய்க்குதல் போல என்னுள தரியவற் றரியதிவ் வுலகில்? |
| 110. | வாய்த்துமிங் குனைப்போல் வாணாள் வறிதாத் தீத்திற லொருவன் சேர்க்கையால் வீதல் மண்ணுளோர் பண்ணிய புண்ணியக் குறைவே ! சுதந்தர மறுவோர்க் கிதந்தீங் குண்டோ? கூறுவோ ரறிவின் குறைவே ; வேறென்? |
| 115. | அன்றியு முன்மிசை நின்றிடும் பெரும்பிழை ஆயிர மாயினுந் தாய்மனோன் மணிநிலை கருதுவ ருன்னலங் கருதா தென்செய்வர்? வருவது வருக ! புரிகுவம் நன்மை. |
| (2-ம் படைஞனை நோக்கி) முருகன் வரவிலை? |
| 2-ம் படை, | | வருவன் விரைவில். |
| 2-ம் படை, | | ஆ ! ஆ ! அறியேம் ! |
| நாரா ; | | என்னையிக் குழப்ப மிடப்புறம்? |
|
|
|