| | ஏற்றிட வல்லரை மாற்றிநீ நிறுத்திக் |
| நாரா,(தனதுள்) | | நல்லனித் தலைவன். வல்லவ ரிவரும். |
| | (காவற்படைகளை விலக்கி நிறுத்திக் காட்ட) |
| முதற்படை, | | போதும் ! போதும் ! |
| காவற்படைகள். | | போதுமே யாங்கள் - |
| நாரா, | | எண்ணுமின் நன்றா யேற்குமுன் ! பின்புநீர் |
| 85. | பண்ணுந் தவறுநம் பாலாய் முடியும். |
| காவற்படை. | | தவிர்கிலங் கடமையில். சத்தியம். தலைவ ! |
| நாரா, | | தகுதியன் றெனச்சிலர் சாற்றிய தொக்க மிகுபழி நீவிரும் மொழிவிரோ என்மேல்? |
| காவற்படை, | | மொழியோ மொன்றும். மொழியோ நும்மேல். |
| நாரா, | 90. | சரி ! சரி ! ஆயின் தாங்குமின் காவல். பரிமற் றையர்க்கெலா முளவோ? |
| 3-ம் படை, | | ஓகோ ! | | 4-ம் படை, | | பெரியதென் பரிபோற் பிறிதிலை. |
| | அணிவகுத் திவ்வயி னமர்மின் ! முருகா ! மற்றை வாயிலிலும் மாற்றியிவ் விதம்யான் |
| 95. | வைத்துள படையும் அழைத்திப் புறநீ நொடியினில் வருதி. |
| முதற்படை, | | அடியேன், அடியேன். |
| நாரா, | | ஆம்பொழு தழைப்போம். வாம்பரி யமர்மின். |
| (தனதுள்) | | அரும்படை யிரண்டு மதோ ! கை கலந்தன. வரும்பழி யாதோ? மன்னவர்க் கேதோ? |
| 100. | ஆவதிங் கறியேன் ! ஜீவக ! ஜீவகா ! |
|
|
|