| | உன்னுதி நன்றாய். ஒருவன் தனக்கா வந்தபோ ரன்றிஃ தூர்ப்போர். அதனால் இதோஅங் கெய்தினோர் யாரே யாயினுஞ் |
| 55. | சுதேசாநு ராகத் தொடாப் லன்றிப் பலவாந் தமது பழம்பழி மீட்போர் கொலைபா தகஞ்செயுங் கொடுயை ரேயாம் |
| (நாராயணன் படைக்கோலமாகிக்குதிரையின்மேல்வர.) |
2-ம் படை. நாராயணன். | | பாரும் ! பாரும் ! நாரா யணரிதோ- உன்பெயர் முருக னன்றோ? |
| 4-ம் படை, | 60. | என்பெயர் சாத்தன், சுவாமி ! |
| | எத்தனை பேருள ரிவ்வாயி லின்கண்? |
| முதற்படை, | | பத்தைஞ் ஞாறுளர். மெத்தவும் உத்தமர். மிகுதிறத் தார். போர் விரும்பினர். இவர்தந் தகுதிக் கேற்ப தன்றிக் காவல். |
| நாரா, | 65. | பொறு ! பொறு ! முருகா ! புரையற் றோர்க்குமற் றுறுபணி, இன்னதென் றுண்டோ? எதிலும் சிறுமையும் பெருமையுஞ் செய்பவர்க் கன்றிச் செய்வினை தனகெது? மெய்ம்மையில் யாவுந் திருத்தமாச் செய்தலே பொருத்தமுத் தமர்க்கு. |
| 2-ம் படை. | 70. | வேணுமென் றாயினு மெங்களை விடுத்தல் நாணமு நோவுமாம் நாரா யணரே ! |
| நாரா, | | வேண்டுமென் றாரே விடுப்பர். சிச்சீ ! அப்படி யேதா னாயினு நமக்குக் கைப்படு கடமையே கடமை - |
| 75. | எத்தனை பேரா லேலுமிக் காவல்? |
| முதற்படை, | | நாலிலொன் றாயின் சாலவு மிகுதி. |
| நாரா, | | அத்தனை வல்லவர் கொல்லோ? ஆயின் இத்தனை பேர்க்குள தொழிலெலாந் தம்மேல் |
|
|
|