| | சண்டிஅச் சங்கரன் வந்துளான் சமர்க்கு |
| 25. | கண்டேன். கையிற் கிடைக்கிற் பண்டென் தாயையு மென்னையுஞ் சந்தையிற் பழித்த வாயினை வகிர்ந்து மார்பினைப் பிளந்து - | | | (வாய்மடித்துப் பற்கடிக்க) |
| 4-ம் படை. | | வஞ்சிய ரனைவரு மானமில் மாக்கள். பிஞ்சிற் பழுத்த பேச்சினர், யானெலாம் |
| 30. | நன்றா யறிவன். ஒன்றோ ரென்னுடன். சென்றுளேன் ஜனார்த்தனம்.கண்டுளேன் வைக்கம். |
| 3-ம் படை. | | விடுவே னல்லேன். அடுபோர் முடியினும் நடுநிசி யாயினும் அடுகள முழுதுந் தேடுவன் : சங்கரன் செத்தா னாயினும் |
| 35. | நாடி யவன்றலை நசுக்கி மிதித்து வாயிடை நெடுவே லிறக்கி - |
| | சேவக னாநீ ! செப்பிய தென்னை ! யாவரே பிணத்தோ டாண்மைபா ராட்டுவர்? பிணமோ பிணத்தோ டெதிர்க்க ! |
| 40. | பெருமைநீ பேசேல். பெற்றவுன் தாயேல் அருமைநீ யறிகுவை. |
| | பிணத்தொடு பிணக்கெது? சீ ! சீ ! அன்றியும் ஒருவன் தனக்கா உண்டாங் குரோதங் கருதியிங் கெவன்வா ளுருவினன்? நமக்கெலாம் |
| 45. | மாதா விவ்வயின் மகாநா டிதுவே. ஏதோ அவளையு நம்மையு மிகழ்ந்திவ் வஞ்சியர் வஞ்சமாய் வந்தனர். அதனால் நெஞ்சகங் கொதித்து நெடியநஞ் சுதந்தரந் தனக்கா யுயிரையு முவப்போ டளிக்கத் |
| 50. | துணிந்தே நம்மையு மறந்தே நின்றோம், என்னி லவரவ ரிழுக்குஆர் கருதுவர்? |
|
|
|