நான்காம் அங்கம் 2-வது களம். இடம் : கோட்டைவாசல். காலம் : காலை. | நடர் : கோட்டைகாக்கும் படைஞர் | | (நேரிசை ஆசிரியப்பா) | |
| முதற்படைஞன். | | இப்படை தோற்கி னெப்படை ஜயிக்கும்? எப்படி யிருந்த திராஜன் பேச்சு ! கல்லு முருகிக் கண்ணீர் விடும்.இப் புல்லுங் கேட்கிற் புறப்படும் போர்க்கு. | | 2-ம் படை. | 5. | முற்றுங் கேட்டைகொல்? |
| முதற்படை, | | முற்றுங் கேட்டேன். |
| | சற்றும் மனமிலை திரும்புதற் கெனக்கு. சரியல வாணையில் தவறுத லென்றே, வெருவிநான் மீண்டேன். இலையே லுடன்சென் றொருகை பார்ப்பேன். ஓகோ ! சும்மா |
| 10. | விடுவனோ? பார்க்கலாம் விளையாட் டப்போது. என்செய ! என்செய ! எத்தனை பேரையான் பஞ்சாய்ப் பறத்துவன் ! துரத்துவன் ! பாண்டியில் வஞ்சவிவ் வஞ்சிய ரென்செய வந்தார்? நெஞ்சகம் பிளந்திந் நெடுவாள் தனக்குக் |
| 15. | கொஞ்சமோ ஊட்டுவன் குருதி ! என்செய ! நினைதொறு முடலெலாந் தின்பது தினவே ! பாக்கிய மில்லையென் கைக்கும் வாட்கும் ! |
| 2-ம் படை. | | பாக்கிய மன்றது. பறைப்பயல் பாவி குடிலனோ டுலாவுங் கோணவாய்க் கொடியன், |
| 20. | சடையன், தலைவனோ டெதுவோ சாற்றித் தடுத்தே நமையெலாம் விடுத்தா னிப்பால். |
| 3-ம் படை. | | கெடுத்தா னவனே யென்னையும். அன்றேல் முடித்தே விடுவனென் சபதம் முற்றும். |
|
|
|