பக்கம் எண் :

மனோன்மணீயம்
106

படைகள்.

ஜே ! ஜே !


பாணர் :
ஒல்லுமனை தான்காக்க வுருவியகை வாளதற்குச்
செல்லுமுறை பின்னரிலை திரும்பிடுமின் தெவ்வீர்காள் !
செல்லுமுறை பின்னரிலை யெனத்திரும்பீ ராயின்நுங்கள்
இல்லவர்க்கு மங்கலநா ணிற்றதுவே யிற்றதுவே யியம்பினோமே.

படைகள்.

ஜே ! ஜே !

(படைகளும் ஜீவகன் முதலியோரும் போர்க்களம் நோக்கிப் போக.)


நான்காம் அங்கம் : முதற்களம் முற்றிற்று.