பக்கம் எண் :

மனோன்மணீயம்
123

மனவலி யொல்கலை. மானமே பெரிது.
சிதைவிடத் துரவோர் பதையார் சிறிதும்.

265.

புதைபடுங் கணைக்குப் புறங்கொடா தும்பல்.
மதிகுல மிதுகா றொருவரை வணங்கித்
தாழ்ந்துபின் னின்று வாழ்ந்தது மன்று!
மாற்றார் தமக்கு மதிகுல மாலையும்
ஆற்றி னீருடன்நம் மாண்மையு மளித்து

270.

நாணா துலக மாளல்போல் நடித்தல்
நாணாற் பாவை யுயிர்மருட் டுதலே.
ஒட்டார் பின்சென் றுயிர்வாழ் தலினுங்
கெட்டா னெனப்பட லன்றே கீர்த்தி?
அதனாற் குடிலா! அறிகுதி துணிபாய்.

275.

எதுவா யினும்வரில் வருக. ஒருவனை
வணங்கியா னிணங்குவ னெனநீ மதியேல், (எழுந்து)
வருவோம் நொடியில். மனோன்மணி நங்குலத்
திருவினைக் கண்டுளந் தேற்றி மீள்குவம்.
கருதுவ பலவுள. காணுதும்.

280.இருநீ யதுகா றிவ்வயி னினிதே!

(ஜீவகன் போக)


குடில,கருதுதற் கென்னே! வருவது கேடே.
தப்பினா யிருமுறை, தப்பிலி நாரணன்
கெடுத்தான் பலவிதம். மடப்பயல் நீயே

(பலதேவனை நோக்கி)

அதற்கெலாங் காரணம்.


பலதே. 

அறிகுவை, ஒருவன்

285.

இதுபோல் வேலுன் நெஞ்சிடை யிறக்கிடில்,


குடில,உன்நடக் கையினால்.

பலதே.

உன்நடக் கையினால்!


மன்னனைக் குத்திட உன்னினை : ஊழ்வினை
யென்னையே குத்திட இசைந்தது : யார்பிழை?

 
குடில,பாழ்வாய் திறக்கலை. ஊழ்வினை!
290.பகைக்கலை யெனநான் பலகாற் பகர்ந்துளேன்.