| பலதே. | | பகையோ? பிரியப் படுகையோ? பாவி!
|
| குடில, | | பிரியமும் நீயும்! பேய்ப்பயல்! பேய்ப்பயல் எரிவதென் னுளமுனை யெண்ணுந் தோறும். அரியவென் பணமெலா மழித்துமற் றின்று - |
| பலதே. | 295. | பணம்பண மென்றேன் பதைக்கிறாய் பிணமே! நிணம்படு நெஞ்சுடன் நின்றேன். மனத்திற் கண்டுநீ பேசுதி! மிண்டலை வறிதே! |
| குடில, | | விதி யிது! இவனுடன் விளம்பி யென்பயன்? இதுவரை நினைத்தவை யெல்லாம் போயின! |
| 300. | புதுவழி கருதுவம்! போயின போகுக! (மௌனம்) எதுவுமிந் நாரண னிருக்கில், அபாயம், ஆ! ஆ! உபாயமிங் கிதுவே. | (2) |
நான்காம் அங்கம் : 3-ம் களம் முற்றிற்று. |
|
|
|