நான்காம் அங்கம் 4-வது களம் இடம் : அரண்மனையிலொருசார். காலம் : மாலை.
ஜீவகனுங் குடிலனும் மந்திராலோசனை : பலதேவன் ஒருபுறம் நிற்க.
(நேரிசை ஆசிரியப்பா) |
| ஜீவகன். | | ஆதி யின்னதென் றோதுதற் கரிய வழுதியின் தொழுகுல வாணா ளோரிரா எனமதிப் பதற்கு மிகுந்ததே! குடில! இத்தனை கேடுஇன்று எங்ஙனம் விளைந்தது? |
| 5. | சற்று மறிந்திலேன் தையலர் புகலுமுன். மாற்றார் நமது மதிற்புறத் தகழைத் தூர்த்தா ரெனப்பலர் சொல்லுவ துண்மைகொல்! |
| குடில, | | ஓரிட மன்றே. உணர்ந்திலை போலும். |
| (தனதுள்) | | வேரறக் களைகுதும். இதுவே வேளை. |
| | கென்னென வோதுவன் இன்றையச் சூது? |
| ஜீவ, | | மருவரு மதிலுள கருவி யென் செய்தன? |
| குடில, | | கருவிக ளென்செயுங் கருத்தா இன்றியே! |
| ஜீவ, | | காவ லில்லைகொல்? சேவகர் யாவர்? |
| குடில, | 15. | ஏவலின் படியா மெண்ணா யிரவர் ஆதியர் காவலா ஆக்கியே யகன்றோம். |
| ஜீவ, | | ஏதிது பின்னிவ ரிருந்துமற் றிங்ஙனம்? |
| குடில, | | இருந்திடி லிங்ஙனம் பொருந்துமோ இறைவ! |
| குடில, | | எவ்விதஞ் செப்புகேன்? |
| 20. | நாரணர் காவலின் நாயக ராக்கினோம். போரிடைக் கண்டனை நாரணர் தம்மை. |
| ஜீவ, | | மெய்ம்மை! கண்டனம், விட்டதென் காவல்? |
|
|
|