| குடில, | | ஐய! யா னறிகிலன். அவரிலும் நமக்கு மெய்ம்மையர் யாவர்? வேலியே தின்னில் |
| 25. | தெய்வமே காவல் செய்பயிர்க் கென்பர். |
| | விரோதம்! அடியேன் மேலுள விரோதம். திருவடி தனக்கவர் கருதலர் துரோகம். |
| ஜீவ, | | கெடுபயல்! துரோகம்! விடுகிலன் சிறிதில், |
| குடில, | 30. | மடையன்! ஐயோ! மடையன்! சுவாமீ எலிப்பகை தொலைக்க இருந்ததன் வீட்டில் நெருப்பினை யிடல்போ லன்றோ நேர்ந்தது. விருப்பம்மற் றவர்க்குன் வெகுமதி யாயின், திருத்தமா யொருமொழி திருச்செவி சேர்க்கில் |
| 35. | அளிப்பையே களிப்புட னமைச்சுந் தலைமையும்! அத்தனை யன்புநீ வைத்துளை! | | | (அழுது) |
| | எத்தனை துட்டன்! எண்ணிலன் சற்றும்! |
| குடில, | | ஐயோ! எனக்கிவ் வமைச்சோ பெரிது? தெய்வமே யறியுமென் சித்த நிலைமை! |
| 40. | வெளிப்பட வொருமொழி விளம்பிடில் யானே களிப்புட னளிப்பனக் கணமே யனைத்தும். விடுவேம் அதற்கா வேண்டிலெம் முயிரும்! போர்முகத் திங்ஙனம் புரிதலோ தகுதி? | | | (பலதேவன் மார்பைக் காட்டி.) |
| ஜீவ, | | யார்? யார்? நாரணன்? | | | (பலதேவனை நோக்கி) |
| குடில, | | நின்பகை யன்றுமற் றென்பகை யிறைவ! |
| ஜீவ, | | உன்பகை யென்பகை! ஓ! ஓ! கொடியன்! செய்குவ னிப்போ தேசிரச் சேதம்! |
|
|
|