| | இடங்குழம் பியதிங் கிதனாற் போலும்? |
| குடில, | 50. | அடங்கலு மிதனாலைய! அன்றேல், இடப்புறம் வலப்புறம் யாதே குழம்பும்? மடப்பயல் கெடுத்தான்! மன்ன! நம் மானம்! ஒருமொழி யல்லா திருமொழி யாயின் வெருவர வெம்படை வெல்லுவ தெங்ஙனம்! |
| ஜீவ, | 55. | அழைநா ரணனை. | | | (முதற்சேவகனை நோக்கி) |
| ஜீவ, | | நொடியில். | | | (சேவகன் போக) |
| | பழமையும் பண்பும்நாம் பார்க்கிலம். பாவி! இத்தனை துட்டனோ? ஏனிது செய்தான்? |
| குடில, | | சுத்தமே மடையன்! சுவாமீ! பொறுத்தருள். என்னதே யப்பிழை. மன்ன! நீ காக்குதி! |
| 60. | வருபவை யுன்றிரு வருளால், வருமுன் தெரிவுறு மறிவெனக் கிருந்தும், திருவுளம் நிலவிய படியே பலதே வனைப்படைத் தலைவனா யாக்கிடச் சம்மதித் திருந்தேன். எனதே யப்பிழை. இலதே விவ்விதம் |
| 65. | நினையா னிவனுயிர் நீக்கிடப் பாவி! அதன்பின் னாயினு மையோ! சும்மா இதமுற விராதுபோர்க் களமெலாந் திரிந்து கடிபுரிக் காவற் படைகளுந் தானுமாய் இடம்வல மென்றிலை : இவுளிதே ரென்றிலை : |
| 70. | கடகய மென்றிலை : அடையவுங் கலைத்து, கைக்குட் கனியாய்ச் சிக்கிய வெற்றியை-(விம்மி) |
| ஜீவ, | | கொண்டுவா நொடியில் | | | (2-ம் சேவகனை நோக்கி) |
| 2-ம் சேவ, | | அடியேன்! அடியேன் - |
|
|
|