பக்கம் எண் :

மனோன்மணீயம்
135

சேவகர்,

நாராயணரே!

உமக்காங் கொடிய கழுமா மெமக்கும்
நன்றே யென்றே நின்றோ மன்றிக்
கெடுதியொன் றெண்ணிலம். கொடுமதற் கநுமதி.


நாரா,தென்னவன் சிறைசெயச் செப்பினன் : அதனால்
250.

இன்னம் பிழைப்பே னிக்கழு, உமக்கியான்
சொன்னவா றடங்கித் துண்ணென ஏகில்.
இல்லையே லெனக்கினி யெய்துவ தறியேன்.
வல்லைநீர்! செல்லுமின்! செல்லுமின்! வந்தனம்.
செல்லுமின்! சத்தியம் செயிக்கும்! செயிக்கும்!

255.நல்லது! நல்லது!

(படைஞர் விடைபெற்றுப் போக)


முருக,

நாரா யணரே!

நுஞ்சொ லென்சிரம். ஆயினும் நுஞ்செயல்
சரியோ வென்றெனக் குறுவதோ ரையம்.
சத்தியம் ஜயிக்கு மென்றீர். எத்திறம்?
குடிலன் தனக்கது கூலமா யனைத்தும்

260.முடிவது கண்டும் மொழிந்தீர் முறைமை!

நாரா,

பொறு! பொறு! முடிவி லறிகுவை.


முருக,

முடியுந்

தருணம் யதோ? மரணமோ என்றால்,
மரண மன்றது : மறுபிறப் பென்பீர்.
யாதோ வுண்மை?


நாரா,(இருவரும்

ஓதுவம் : வாவா!

நடந்து)265.

நன்றிது தீதிது வென்றிரு பான்மையாய்த்
தோற்றுதல் துணிபே. அதனால்
தேற்ற மிதேயெனச் செய்கநல் வினையே.

(1)

(நாராயணனும் முருகனும் சிறைச்சாலைக்குப் போக.)


பலதே.

என்னையுன் பீதி! எழுவெழு. இவர்க்குன்
பொன்னோ பொருட்டு?

(பலதேவனுங் குடிலனும் வெளியே வந்து)


குடிலன்,

போ! போ! மடையா

270.உன்னினன் சூதே.