கலக்கமொன் றின்றிக் கழுவே றிடுதல்
புலப்படக் கண்டுளா யிலக்கமின் முறையே.துரத்திடுந் துயர்க்கணம் வருத்திடுங் காலைமரித்தலோ வவையெலாஞ் சகித்தலோ தகுதி?தன்னுயி ரீவர் தக்கோர் சார்ந்தமன்னுயிர் காத்திடு மார்க்கமற் றஃதேல்!
வார்கடன் முகட்டில், மாநிதி வழிஞர்ஆர்கலன், அலையெறி புயல்கா லாதியாற்சேர்திசை திரிந்து தியங்குமேல், மீகான்களமுங் காலமுங் கருதித் தனக்குறுதளர்வுபா ராட்டுதல் தவிர்த்து, சாய்ந்து, மற்
றெதிருறு காற்றிற் கிசைவுற வதிந்து,தன்றிசை செல்லத் தக்ககால் வரும்வரைசென்றொரு கரைசேர்ந் தொன்றுவ னல்லால்,உவப்புறு நிதிகெட வுழையுளார் களும்பரிதவித்திட மரக்கலந் துறப்பனோ சாற்றாய்.
தக்கோர் செயலெலாந் தமக்கா வலவே!முக்கியம் புகழோ தக்கவுன் கடமையோ?அதனால் ஜீவக! அகற்றந் நினைப்பு.மதிகுலம் வந்த மதிவலோர் பலரும்செலாவழி நின்திமில் செலுத்தினை ; தீங்காய்
உலாவிய சுழல்காற் றோடொரு சுழியிடைப்பட்டனை ; நம்பிய பாய்மரம் பழுது.விட்டிடிக் கோட்டையாம் வெளிக்கட லோட்டம்.மண்டிய பெருங்காற் றடங்கும் வரையும்அண்டயி லுளதோர் கைவழி யதனில்
ஒண்டிநீ யொதுங்கி யுன்றொன் னகாரந்துவாத சாந்தத் துறைபோய்நிவாதமா நிலைபெற லேநெறி முறையே.
என்குல முனிவ! இயம்பிய மாற்றம்நன்கே. உன்ற னயப்பிற் கென்செய!
கழுமரக் கதையதைக் கண்டேன் இன்றே.பழுதுபாய் மரமெனப் பகர்ந்தது முண்மை!