பக்கம் எண் :

மனோன்மணீயம்
137

நான்காம் அங்கம்

5-ம் களம்.

இடம் : அரண்மனையிலொரு சார். காலம் : மாலை.

ஜீவகனும் சுந்தரமுனிவரும் மந்திராலோசனை.


(நேரிசை ஆசிரியப்பா)


சுந்தரர். 

வளையும்வேய் நிமிரும் ; வளையா நெடுமரங்
கிளையுடன் கெடுமே கிளர்காற் றதனில்!


ஜீவகன்.

முளையுமோர் மரமோ? முனிவ! புல்லினம்!
களைகுவர், களைகிலர் காழ்பெறுந் தருக்கள்.

5.

சேணுயர் தேக்கு திசையெறி சூறையில்
ஆணிவே ருடனெழுந் ததிர்ந்தசைந் திறினும்
பேணுவ ரதனைப் பெரியோர்! யாரே
காணுவர் காழறு நாணமில் நாணலை?
ஒருயிர்ப் பேனு முண்டே லடிகாள்!

10.

போரிடைப் போக்குவன் ; புகழெனக் கதுவே!


சுந்தர,பொறு பொறு! ஜீவக! வெறுமொழி புகலேல்!
அரியது செய்வதே யாண்மையும் புகழும்!
அரிதுயிர் தரித்தலோ மரித்தலோ அறைதி.
வேட்டையோ ரோட்டிட வெருவுதீக் குருவி
15.

நீட்டிய தன்சிர நீள்மணற் புதைத்துத்
தனதுகண் காணாத் தன்மையர் பிறருந்
தனதுடல் காணா ரெனநினை வதுபோல்
என்னையிம் மயக்க மன்னவ! உனக்கும்!
சிறுபசி தாங்காச் சிறுமையர் பற்பலர் ;

20.

அறவழி யிதுவென அறியாக் கயவர் ;
பிறர்பொருளை வௌவியம் பிறவுயிர் கவர்ந்தும்
அலையுந் தீமைய ரநேகர், அகப்படின்
மலைவற மரணமும் வெருவார் மான,