பக்கம் எண் :

மனோன்மணீயம்
140

தீமைகை விடற்கு வேளைசிந் திப்போர்
சேய்மை யுனிமனை திரும்பா ரொப்பர்.
ஆதலால் ஜீவக! தீதென வருதற்
கியாதோ ரையமு மிலைநீ தொடரியல்

95.

எனவின் றெய்திய வற்றா லுனது
மனத்திடை மயக்கற மதித்துளை யாயின்,
ஒழுங்கா யிவையெலா மொழித்தயான் குறித்த
மருங்கே யணைந்து வாழலே கருமம்.
வேறிலை தேறு மார்க்கம்.

100.

கூறுதி யதனா லுன்மனக் கோளே.

(2)

ஜீவ,

ஐய! யா னுரைப்பதென்? அடுத்தவை இவையெலாம்
கைவிடி லென்னுயிர் கழியும். அதனில்
இன்றியான் பட்ட விகழ்ச்சி முழுதும்
பொன்றிடப் பொருதுபின் பொன்றுத லன்றோ

105.

சிறப்பது செப்புதி! சிறியே னொருசொல்
மறுத்தது பொறுத்தருள் மாதவக் கொழுந்தே!


சுந்தர,

சங்கரா! சற்றோ தாதான் மியபலம்!
வெங்கரா பிடித்தவை விடினும் விடுமே!
நல்லது ஜீவக! நண்டெனும் புல்லிய

110.

அற்பமாஞ் சிற்றுயி ரரியதன் னுடலையும்
பிற்கிளைக் கிரையென வீந்தவை பேணல்
கண்டும் புகழிற் கொண்டனை பிராந்தி.
இவ்வுயி ரியலுல கியற்கையென் றெண்ணினேன்.
செவ்விதின் நின்னிலை தேர்ந்தபின் னையம்

115.

வருவது. அதனால், மதிகுலம் வந்த
ஒருமலர் நின்னுழை யுள்ளது : தமிழர்
ஆவோர் யார்க்கு மஃதுரித் தாம் : நீ
காவா யாகிற் காப்பதெங் கடனே.


ஜீவ,

இதுபோ லில்லை யடிகள் செய்யு

120.

முதவி. தமியேற் குளதுய ரிதுவே.
கண்மணி தனையெணிப் புண்படு முள்ளம்
அருளுதி காக்கு முபாயம்,
இருணிறை யிடுக்கணுக் கியைந்திடு மருந்தே.

(3)