| சுந்தர, | | நல்லது! கேட்டி! சொல்லுதும். உரியநீர் |
| 125. | விட்டான் முதலையும், விரும்பிய திலகப் பட்டாற் களிறும் பலமில வாகி விடுமென வறிந்த கெடுவினை யாளர் தொடர்பினால், அவரிடு தூண்டிலிற் சிக்கி யிடமது பெயர்ந்துழி, எடுத்தவெவ் வினைக்குங் |
| 130. | கேடுமுன் கருதிக் கோடலே முறையெனும், அறிவோர் மொழியயர்ந் திறுமாப் பகத்துட் கொண்டுநீ நின்றதைக் கண்டிக் கடிபுரி தொட்டென் னுறையுள் மட்டுமோர் சுருங்கை அதிரக சியமா யமைத்துளேன். அவ்வழி, |
| 135. | சதமென நம்புமிச் சாலி புரமும், அதன்புற மூன்றிய அடர்புலப் படையும், அறிந்திடா வகையவை கடந்துசென் றுன்னை மறந்திடா மாபதி யடைந்திடச் செயுமே. |
| ஜீவ, | | தேவரீர் செய்யுந் திருவரு ளுக்குமா |
| 140. | றாவது முளதோ? ஆ! ஆ! அடிகாள்! வழுதியர் பலர் பலர் வழிவழி காக்கும் முழுமதித் தொழுகுலத் தெய்வநீ போலும், பழுதற நீயிவண் பகர்ந்ததோர் வழியிது திருத்திட எடுத்த வருத்தமெத் தகைத்தே! |
| சுந்தர, | 145. | நல்லது! முகம னவின்றனை. நிற்க. சொல்லிய சுருங்கை யுனக்குமிவ் விடுக்கணி லுதவுமோ வன்றோ உரைக்குதி விரைந்தே. |
| ஜீவ, | | அடியே னாசை திருவடி யறியும். கடிபுரி விடிலுயிர் நொடியுமிங் கிராது. |
| 150. | பாண்டியர் குலமெனும் பாற்கட லுதித்த காண்டகு கன்னியை யிவ்வழி யுன்றிரு உளப்படி கொடுபோ யளித்தரு ளுதியேல், இந்துவின் குலமெனு முந்திய பெயர்போய்ச் சுந்தரன் குலமெனச் சந்ததம் வழங்கும். |
| 155. | நீங்கா திதுகா றென்னுளம் நிறைந்த தாங்காப் பெருஞ்சுமை தவிர்தலாம், யானும் |
|
|
|