பக்கம் எண் :

மனோன்மணீயம்
142

ஒருமன முடையனாய் மறலியும் வெருவ
ஆற்றுவ னரும்போர். அதனிடை யமபுரம்
ஏற்றுவ னெங்குலந் தூற்றிய சேரனை :

160.

வென்றிடின் மீளுவன். அன்றெனிற் பண்டே
அனையிலாத் தனையளுக் கம்மையு மப்பனுந்
தயாநிதி! நின்றிருச் சரணமே யென்ன
வியாகுல மறவே விடுவனென் னுயிரே.


சுந்தர,

விடுகிலை, யாகினும் வெளிக்கட லோட்டம்.

165.

நடுநிசி நாமினி வருகுதும். கொடிய
கடிபுரிக் கனலிடைக் காய்ந்திடு முன்றன்
சிறுகொடி மறுவிடம் பெயர்த்துதும் சிறந்த
அந்தமில் செழியரைத் தந்திட வுரித்தே.

(எழுந்து)


ஜீவ,கட்டளைப் படியே? கட்டிய கற்படை
170.

கண்டிட வாசையொன் றுண்டடி யேற்கு.


சுந்தர,காட்டுது மின்றிரா கற்படை சேர்முறை.
ஒருவ ரொருபொரு ளறியி லிரகசியம் ;
இருவ ரறிந்திடிற் பரசிய மென்ப.
கைக்கெட் டியதுதன் வாய்க்கெட் டுதற்குள்
175.

வந்துறு மந்தமில் பிரதிபந் தங்களே.

(முனிவர் போக)


ஜீவ,

வந்தனம். வந்தனம். அடிகாள்! வந்தனம்.

(தனிமொழி)

என்னே! என்னே! இந்நா ளியன்றவை!
கொன்னே கழிந்தன் றோரிமைக் கொட்டும்.
குகுநாள் மழையொடு மிகுகாற் றெறிந்த

180.

பரவையின் பாடெலாம் பட்டதென் னுளமே.
இரவினில் வருபவை யெவையெலாங் கொல்லோ!
தாயே! தாயே! சார்வன சற்றும்
ஆயேன், எங்ஙனம் பிரிந்துயி ராற்றுவேன்?
விடுக்குமா றெவனென் விளக்கே? உன்னைக்

185.

கெடுக்குமா றெவனிக் கிளர்போ ரிடை?அது
தடுக்குமா றெவனினி? சமழ்ப்பற் றுடலம்
பொறுக்குமா றெவனிப்! பொல்லா வல்லுயிர்
துறக்குமா றெவ னுனைத் துணையற விடுத்தே!