நாற்புற நெருப்புறி னளியுந் தனதுவாற்புற நஞ்சால் மாய்ந்திடு மென்ப.நரனலன் ; நரேந்திரன் ; நானது போற்சுதந்தரனல னெனிலென் தலைவிதி கொடிதே!பிரிவென வென்னுளங் கருதிடு முனமே
பிரையுறு பாலென வுறைவதென் னுதிரம்.நாணா துன்முகங் காணுவ தெவ்விதம்?நடுநிசிப் பொழுது தொடுகற் படைவழிமுனிவரன் பிறகுனைத் தனிவழி விடுத்திவண்தங்குவன் யானும்! தங்குவை நீயும்!
இங்கதற் கிசையேன் இறக்கினும் நன்றே!
(மௌனம்)
கற்படை யிதுதா னெப்புறத் ததுவோ!உரைத்திலர் முனிவர். ஒளித்தனர். இஃதும்உளதோ? இலதோ? உணர்பவர் யாவர்?
 .
(சேவகன் வர)
(சேவகன் போக)
உண்மையெப் படியென
நம்புத லெல்லாந் துன்பமே தருவது,நம்பினோம் நாரா யணனை. அதற்காவம்பே செய்தான் மாபா தகனவன்.நட்பே நமக்கிங் குட்பகை யானது!முனிவரோ முதுநகர் விடுத்தநாள் முதலாகளவழி யிதுமுனி கட்டற் பாற்றோ
மனத்திடைக் களங்கம் வைத்துளர். அஃதவர்விளம்பிய மொழியே விளக்கிடும். நன்றாய்ஆரா யாமுன மனுப்புதல் தவறே. (குடிலன் வர)வாராய் குடில! மந்திரி யுனக்குநேர்தான் ஆரே! நிகழ்ந்தவை யறிவைகொல்?