| | நந்தமை யழைத்தன ரொளித்திட வவ்வழி ; மறுத்திட, மனோன்மணி யேனுமங் கனுப்பென ஒறுத்தவர் வேண்டினர் உரியநங் குலமுனி யாதலி னாமென விசைந்தோம் ; அவ்வழி |
| 225. | யாதென வினாயதற் கோதா தேகினர் ; பாதிரா வருவராம். பகர்ந்தவிக் கற்படை மெய்யோ பொய்யோ? மெய்யெனி லெவ்வயின் உளதென வுணர்தியோ? ஒழுங்குகொல், நமது இளவர சியையங் கனுப்புதல்? |
| 230. | முன்னர்நா மொருநா ளிந்நகர் காண வழைத்தோம்! அந்நாள் யாதோ பூசை யிழைத்திட வேரரறை யிரந்தனர் |
| | செவ்வே வடக்குத் தேம்பொழிற் கிப்புறம். |
(தனதுள்)(ஜீவகனை நோக்கி) | | உறுவதங் கென்னென வுணர்ந்தனை? |
| குடில, | | அதுவே கற்படை. அறிந்துளேன் பழுது செயத்தகு வினையல வாதலில் திருவுளம் உணர்த்திலேன். முனிவ ரோதிய திதுவே. |
| 240. | இவ்வரண் முற்று மியற்றிய நமக்குச் செவ்விதி லிதுவோ செய்தற் கரியது? சுந்தரர் நமையெலாம் புந்தியற் றவரென நொந்துதா முழைத்ததை நோக்கிடில் நகைப்பே! |
| ஜீவ, | | நந்தொழில் பழித்தலே சிந்தையெப் பொழுதும் : |
| 245. | பண்டே கண்டுளோம். பாங்கோ வனுப்புதல்? |
| குடில, | | பழுதல : பாலுணுங் குழவிகை யிருப்ப மல்லுயுத் தஞ்செய வல்லவர் யாரே? |
|
|
|