| | அனையினை யொருபாற் சேமமா யனுப்பிய பினையிலை கவையும் பீதியும் பிறவும். |
| 250. | உட்பகை வெளிப்பகை யெப்பகை யாயினென்? கவலையொன் றிலதே லெவருனை வெல்வர்? ஆதலான் முனிவ ரோதிய படியே யனுப்புத லவசியங் குணப்பிர தம்மே. ஆனா லறியா அரசகன் னியர்கள், |
| 255. | தேனார் தெரியல் சூடுமுன் னிரவில் தனிவழி யநியர்பால் தங்குதல்? |
| குடில, | | முனிவரே யாயினும், அநியரே. உலகம் பைத்தியம் ; பழித்திடும் ; சத்திய முணராது. |
| ஜீவ, | | மெய்ம்மை. வதுவைமுன் விதியன் றனுப்புதல். |
| குடில, | 260. | அனுப்பினு மதனா லாம்பய னென்னே? மனத்துள கவலை மாறுமோ? கவலை முன்னிலும் பன்னிரு பங்காய் முதிரும். |
| ஜீவ, | | அதுவே சரி! சரி! ஐயமொன் றில்லை. வதுவைக் கிதுவோ தருணம்? |
| 265. | அடியே னறிவிப் பதுவுமிங் கதுவே! கொடிதே நந்நிலை. குற்றமெப் புறமும். அடிக ளறைந்தவா றனுப்பா திருக்கில் உட்பகைச் சதியா லொருகால் வெற்றி தப்பிடின் நங்குல மெப்படி யாமோ? |
| 270. | வைப்பிட மெங்குபின்? எய்ப்பிட மெங்கே? திருமா முனிவரோ கருநா வுடையர். நம்பிய தலைவரோ வம்பினர் ; துரோகர். இத்தனை பொழுதுமங் கெத்தனை கூச்சல்! எத்தனை கூட்டம்! எத்தனை குழப்பம்! |
| 275. | முருகனு நாரா யணனும் மொழிந்த அருவருப் புரையிங் கறையேன். அவர்தாஞ் சேவகர் குழாங்களைத் திரட்டி யென்மேல். |
|
|
|