| | ஏவினர் ; அதற்கவ ரிசைந்திலர். பிழைத்தேன்! வேண்டினர் பின்னையும் ; தூண்டின ருன்னெதிர். |
| ஜீவ, | 280. | காண்டும்! காண்டும்! கடுஞ்சிறை சேர்த்தனை? |
| குடில, | | சேரா திவரைமற் றியாரே விடுவர்? ஆயினுந் தலைவர் நிலைமை யிஃதே! வெல்லுவ தெலாநம் வீரமே யல்லால் இல்லை யவர்துணை யென்பது தெளிவே. |
| 285. | அல்லொடு பகல்போ லல்லல்செய் கவலையும் வீரமு மெங்ஙனஞ் சேருமோ அறியேன். கவலைதீ ருபாயங் கருதில், நுவல்தரு கல்லறை நன்றே கடிமண முடியில் - கடிமண மதற்கோ, முடிபுனை மன்னர் |
| 290. | வேண்டுமென் றன்றோ ஆண்டகை நினைத்துளை? வருடக் கணக்காய் வேண்டுமற் றதற்கே. ஒருநலங் காணி னொருநலங் காணேம். ஏற்ற குணமெலா மிருப்பினு மிதுபோல் மாற்றல னாய்விடின் மனோன்மணி யென்படும்? |
| 295. | பிரிதலே யரிதாம் பெற்றியீர்! பிரிந்தபின் பொருதலே யாய்விடிற் பொறுப்பளோ தனியள்! பூருவ புண்ணிய மன்றோ மன்றல் நேருமு னிங்ஙன நெறியிலான் துர்க்குணம் வெளியா யினதும்? எளிதோ விறைவ! |
| 300. | வேந்தராப் பிறந்தோர்க் குனைப்போற் சாந்தமும் பிறர்துயர் பேணும் பெருமையும் ஒழியா அறம்நிறை யகமு மறிவு மமைதல்? பாண்டமேல் மாற்றலாங் கொண்டபின்! என்செய! ஆண்டுகள் பழகியு மறிகிலஞ் சிலரை. |
| 305. | ஐயோ! இனிநா மந்நிய ராயின் நன்றா யுசாவியே நடத்துதல் வேண்டும். அன்றேற் பெரும் பிழை! |
| குடில, | | ஆதலின், இறைவ! ஆய்விடத் தெங்கும் |
|
|
|