பக்கம் எண் :

மனோன்மணீயம்
147

ஏதமே தோன்றுவ தென்னே யிந்நிலை?

ஜீவ,310.அரசல வெனினமக் காம்பிழை யென்னை?

குடில,

திருவுளப் பிரியம். தீங்கென் னதனில்?
உன்றன் குலத்திற் கூன்றுகோல் போன்று
முடிமன் னவர்பல ரடிதொழ நினது
தோழமை பூண்டுநல் லூழிய மியற்றும்

315.

வீரமும் மேதையுந் தீரமுந் திறமுங்
குலமு நலமுங் குணமுங் கொள்கையும்
நிரம்பிய நெஞ்சுடைப் பரம்பரை யாளராய்
நிற்பவர் தமக்குமற் றொப்பெவ் வரசர்?
அற்பமோ ஐய! நின் னடிச்சே வகமே?


ஜீவ,320.

என்னோ மனோன்மணிக் கிச்சை? அறிகிலேன்!


குடில,

மன்னோ மற்றது வெளிப்படை யன்றோ?
அன்னவட் கிச்சை யுன்னுடன் யாண்டும்
இருப்பதே யென்பதற் கென்தடை? அதற்கு
விருத்தமாய் நீகொள் கருத்தினைச் சிந்தையிற்

325.

பேணியே கலுழுநள் போலும். பிறர்பால்
நாணியிங் கோதாள். வாணியேல் நவில்வள்.


ஜீவ,

உத்தமம்! உத்தமம்! மெத்தவு முத்தமம்!
பலதே வன்றன் நலமவள் கண்டுளாள்?


குடில,பலகால் கண்டுளாள். கண்டுளா னிவனும்.
330.

ஆர்வமோ டஃதோ மார்பிடைப் பட்டபுண்
‘மனோன்மணி மனோன்மணி’ எனுமந் திரத்தால்
ஆற்றுவான் போலவே யவ்வறை யிருந்தவன்
சாற்றலுஞ் சற்றுமுன் ஜாடையாய்க் கேட்டேன்.
ஆயினும். அரச! பேயுல கென்குணம்

335.

அறியா ததனால் வறிதே பலவுஞ்
சாற்றும். தன்னயங் கருதல்போற் பிறர்க்குத்
தோற்றும். அதனால் தூற்றுவர். அதுவும்
மாற்றலே மந்திரத் தலைவர்தம் மாட்சி.
ஆதலின், இறைவ! அவைக்களத் தநேக -


ஜீவ,340.ஓதலை. ஓதலை. உனதன் றத்தொழில்.