| | தனையைக் குரியது தந்தையே யுணருவன். இனையதே யென்மகட் கிந்நிலைக் கேற்பதும். அரசனா யாய்கினுஞ் சரியிம் முடிபு. மிகைதெரிந் தவற்றுள் மிக்கது கொளலெனுந் |
| 345. | தகைமையில் தகுவது மிதுவே, அதனால், குடிலா! மறுக்கலை. |
| ஜீவ, | | இந்நிசி யிரண்டாஞ் சாம மன்றோ முன்னநாம் வைத்த முகூர்த்தம்? |
| ஜீவ, | | செவ்விது செவ்விது! தெய்வசம் மதமே! |
| 350. | ஆவா! எவ்வள வாறின தென்னுளம்! ஓவா என்றுயர்க் குறுமருந் திதுவே! பிரிந்திட லொன்றே பெருந்துயர். |
| | இருந்திட லெல்லா மொருநாள். அதற்குள் வெல்லுதும், காண்டி! மீட்குதும் உடனே. |
| ஜீவ, | 355. | நல்லது! வேறிலை நமக்காம் மார்க்கம். ஒருமொழி மனோன்ம ணியுடன்கேட் டிஃதோ வருகுதும், அதற்குள் வதுவைக் கமைக்குதி யவ்வறை யமைச்ச ரேறே! | (4) |
| குடில, | | தப்பினன் நாரணன். சாற்றற் கிடமிலை. |
| (தனிமொழி) | 360. | இப்படி நேருமென் றெண்ணினர் யாவர்? முனிவரன் வந்ததும், நனிநல நமக்கே! மறுப்பளோ மனோன்மணி? சீசீ! மனதுள் வெறுப்புள ளேனும் விடுத்தவ ளொன்றும் மொழியாள். சம்மதக் குறியே மௌனம். |
| 365. | அழுவாள் : அதுவும் பிரிவாற் றாமையே யாய்விடும், அரச னாய்விலா வுளத்துள். நடுநிசி வருமுன் கடிமண மிவண்நாம் முடிக்கின் முனிபின் தடுப்பது மெவ்விதம்? ஏய்த்திட வெண்ணின னென்னையும்! பேய்ப்பயல்! |
|
|
|