பக்கம் எண் :

மனோன்மணீயம்
149

370.வாய்த்ததிங் கெனக்கே மற்றவன் கற்படை.

(மௌனம்)

ஊகஞ் சென்றவா றுரைத்தோம். உறுதி
யாகமற் றதனிலை யறிவதார்? உளதல
துரைப்பரோ முனிவர்? உளதெனி லுரைத்தவா
றிருத்தலே யில்பாம். எதற்கு மீதுதவும். (மௌனம்)

375.

சென்றுகண் டிடுவம். திறவுகோ லிரண்டு
செய்த தெதற்கெலா முய்வகை யானதே!
எத்தனை திரவிய மெடுத்துளேம்! கொடுத்துளேம்!
அத்தனை கொடுத்து மறிவிலாப் படைஞர்,
நன்றியில் நாய்க ளின்றஃ தொன்றும்

380.

உன்னா தென்னையே யோட்டிடத் துணிந்தன.
என்னோ நாரணன் தனக்குமிங் கிவர்க்கும்?
எளியனென் றெண்ணினேன். வழிபல தடுத்தான்.
கெடுபயல் பாக்கியம், கடிமண மிங்ஙனம்
நடுவழி வந்ததும்! விடுகிலம்.

385.கொடியினை யினிமேல் விடுகிலம் வறிதே.(5)

நான்காம் அங்கம் : 5-ம் களம்
முற்றிற்று.
---------


கலித்துறை

அரிதா நினைத்ததன் னங்கங்கள் யாவு மழிந்தபின்னும்
புரியே பொருளெனப் போற்றிய ஜீவகன் புந்தியென்னே!
பிரியாத சார்பு பெயர்ந்து விராகம் பிறந்திடினுந்
தெரியாது தன்னிலை யாணவஞ் செய்யுந் திறஞ்சிறிதே!


நான்காம் அங்கம்
முற்றிற்று.
-------


ஆசிரியப்பா
வஞ்சிப்பா
கலித்தாழிசை
கலித்துறை

12-க்கு
1-க்கு
3-க்கு
1-க்கு
அடி
,,
,,
,,
1297
14
12
4
-------

ஆக அங்கம் 1-க்குப் பா 

17-க்கு,,1327