பக்கம் எண் :

மனோன்மணீயம்
150

ஐந்தாம் அங்கம்

முதற் களம்


இடம் : கோட்டைக்கும் வஞ்சியர் பாசறைக்கும் நடுவிலுள்ள வெளி.

காலம் : யாமம்.
குடிலன் தனியே நடக்க.

(நேரிசை ஆசிரியப்பா)


குடிலன்.
(தனிமொழி)

திருமணங் கெடினுந் தீங்கிலை யீங்கினி
இருசர மின்றி யெப்போ ரிடையும்
ஏகார் மதியோர். இதில்வரு கேடென்?
ஆகா வழியு மன்றிது. சேரனை

5.

அணைந்தவன் மனக்கோ ளுணர்ந்ததன் பின்னர்
சுருங்கையின் தன்மை சொல்லுது மொருங்கே.
இசைவனேற் காட்டுதும். இன்றேல் மீள்குதும்,
பசையிலா மனத்தன்! பணிதலே விரும்புவன்.
பாண்டிநா டாளவோ படையெடுத் தானிவன்!

10.

தூண்டிடு சினத்தன் : தொழுதிடின் மீள்வன்.
வேண்டிய நீரும் விழைந்ததோர் தாரும்
பாண்டில் பாண்டிலா யாண்டுகள் தோறும்
அனுப்புதும். குறைவென் னதனில்? இதுவே
மனக்குறை நீக்கு மார்க்கம் -வதுவை

15.

போயினென்? ஆயினென்? பேயன் நம்மகன்
எடுத்தெறிந் திடுவனிப் போதே நம்மொழி.
அடுத்தநம் படைஞரோ பகைவர் : அவர்நமைக்
கெடுத்தநா ரணற்கே கேளொடு கிளைஞர்.
ஆதலி லிஃதே தீதறு முறுதி.-

20.

என்னை நம்ஊகம்! என்னை நம்ஊக்கம்!
முன்னர்யாம் அறியா இன்னநற் சுருங்கையில்
துன்னியருள் வழிதனி தொடர்ந்திவண் சேர்ந்தோம்.
ஊக்கமே பாக்கியம். உணர்விலார் வேறு
பாக்கிய மூழெனப் பகர்வதெல் லாம்பாழ்.