பக்கம் எண் :

மனோன்மணீயம்
151

25.

சாக்கியம் வேறென்? சாத்தியா சாத்தியம்
அறிகுறி பலவா லாய்ந்தறிந் தாற்றுந்
திறமுள வூகமே யோகம் : அன்றி

(நட்சத்திரங்களை
நோக்கி)

வான்கா டதனில் வறிதே சுழலும்
மீன்காள்! வேறு முளதோ விளம்பீர்?

30.

மதியிலா மாக்கள் விதியென நும்மேற்
சுமத்துஞ் சுமையுந் தூற்றுஞ் சும்மையும்
உமக்கிடு பெயரு முருவமுந் தொழிலும்
அமைக்குங் குணமும் அதில்வரு வாதமும்,
யுக்தியு மூகமும் பக்தியும் பகைமையும்,

35.

ஒன்றையும் நீவி ருணரீர்! - அஃதென்?
வென்றவர் பாசறை விளங்குவ தஃதோ!
இங்குமற் றுலாவுவன் யாவன்? பொங்குகால்
வருந்தொறுஞ் சிலமொழி வருவ, அஃதோ
திரும்பினன்! ஒதுங்குவதும். தெரிந்துமேற் செல்குவம்.

(புருடோத்தமன் தனியா யுலாவிவர)


(குறள்வெண் செந்துறை)


புரு,(பாட.

உண்ணினைவி லொரு பொது மோய்வின்றிக் கலந்திருந்து

முயிரே யென்றன்

கண்ணிணைக ளொருபோதுங் கண்டிலவே நின்னுருவங்

காட்டாய் காட்டாய்.

(1)
அவத்தைபல வடையுமன மனவரதம் புசித்திடினு

மமிர்தே யென்றன்

செவித்துளைக ளறிந்திலவே தித்திக்கு நின்னாமஞ்

செப்பாய் செப்பாய். 

(2)
பொறிக ளறியாதுள்ளே புகும்பொருள்க ளிலையென்பர்

பொருளே யுன்னை

யறியவவா வியகரணம் அலமாக்க வகத்திருந்தா

யச்சோ வச்சோ.

(3)

(புருடோத்தமன் சற்றே யகல)


குடில,
(தனிமொழி)
40.

மனிதன லனிவன்! புனிதகந் தருவன்!
தேவரு முளரோ? யாதோ? அறியேன்.
இருளெலா மொளிவிட இலங்கிய வுருவம்