பக்கம் எண் :

மனோன்மணீயம்
152

மருள்தரு மதனன் வடிவே! மதனற்கு
உருவிலை யென்பர். - ஓசையு முருவும்! -
45.பாடிய பாட்டின் பயனென்? அஃதோ!
நாடி யறிகுதும். நன்று நன்று.

(புருடோத்தமன் திரும்பி வர)


புரு,(பாட.புலனாரக் காண்பதுவே பொருளென்னும் போதமிலாப்

புன்மை யோர்க்கிங்

குலவாதென் னுளநிறையு முனதுண்மை யுணர்த்தும்வகை
 .

யுண்டே யுண்டே.

(4)
.பெத்தமனக் கற்பிதமே பிறங்குநினை வெனப்பிதற்றும

பேதையோர்க் கோர்

யத்தனமற்றிருக்க வென்னு ளெழுமுனது நிலையுரைப்ப

தென்னே யென்னே.

(5)
தேர்விடத்தென் னுள்ளநிறை தெள்ளமுதே யுன்னிலைமை

தேரா திங்ஙன்

ஊர்விடுத்தும் போர்தொடுத்தும் உனையகல நினைத்ததுமென்

னூழே யூழே.

(6)

குடில,

சேரனே யாமிது செப்பினோன்.-போரினில்
ஒருபுற மொதுங்கி யரசனை யகற்றி
நின்றதாற் கண்டிலேன். நிறைந்த காமுகன்.

50.

ஒன்றனு கூல முரைத்தான். நன்றே
ஊரிவன் விடுத்ததும் போரிவண் தொடுத்ததும்.
எண்ணிய கொள்கைக் கிசையும் புகன்றவை.
நண்ணுதும் நெருங்கி. நல்லது! திரும்பினன்.

(புருடோத்தமன் திரும்பிவர)


புரு.(தனிமொழி)

என்றுங் கண்டில மின்றுகண் டதுபோல்,

55.

எத்தனை முகத்திடைத் தத்துறு துயரம்!
இவ்வயின் யான்வந் திறுத்தநாள் முதலாக்
கௌவையி னாழ்ந்தனை போலும்.-ஐயோ!

(குடிலன் எதிர்வர)

(குடிலனை நோக்கி)

ஜடிதி! பெயரென்! சாற்றுதி! தத்க்ஷணம்!


குடில,

அடியேன்! அடியேன்! குடிலன்! அடிமை!