புரு. குடில, | 60. | வந்ததென் இருள்வயின்? வாளிடென் னடியில்! வெந்திறல் வேந்தநின் வென்றிகொள் பாசறை சேர்ந்துன் னமையந் தேர்ந்து தொழுதுஓர் வார்த்தைநின் திருச்செவி சேர்த்திடக் கருதி வந்தன னடியேன் : தந்தது தெய்வம் |
| 65. | உன்றன் திருவடி தரிசன முடனே! சிந்தையெப் படியோ வப்படி யென்செயல்! |
| புரு. | | செப்புதி விரைவில். செப்புதி வந்தமை! |
| குடில, | | ஒப்பிலா வீர! எப்புவ னமுநின் மெய்ப்புகழ் போர்த்துள ததனால், இப்புவி |
| 70. | நீவரு முனமே நின்வசப் பட்டுத் தாவரு மின்பந் தடையறத் துய்ப்பப் பாக்கியம் பெற்றிலம் பண்டே யென்றுனி யேக்கமுற் றிருந்ததை யானெடு நாளா யறிந்துளன். இன்றுநீ யாற்றிய போரிற் |
| 75. | செறிந்திரு படையுஞ் சேர்தரு முனமே முறிந்தியா மோடிய முறைமையுஞ் சிந்தையிற் களிப்படை யாமலே கைகலந் தமையும் வெளிப்படை யன்றோ? வேந்த! இப் புவியோர் வெல்லிட மும்வெலா இடமும் யாவும் |
| 80. | நல்லவா றறிவர். நாயினேன் சொல்வதென்? வேசையர் தங்க ளாசையில் முயக்கம் அன்றோ இன்றவ ராற்றிய போர்முறை? என்செய் வாரவர்? என்செய்வார்? ஏழைகள்! நின்புகழ் மயக்கா மன்பதை யுலகம் |
| 85. | யாண்டு மின்றெனில், அணிதா மிந்தப் பாண்டியு நின்பாற் பகைகொளத் தகுமே! ஒருவா றறமே யாயினும், மருவாக் கொற்றவர் பிழைக்காக் குற்றமில் மாக்களை மற்றவர் மனநிலை முற்ற வறிந்தபின் |
| 90. | கருணையோ காய்தல்? தருமநல் லுருவே! |
புரு.(தனதுள்) (குடிலனை நோக்கி) | | யாதோ சூதொன் றெண்ணினன். அறிகுவம். வேண்டிய தென்னை யதனால்? விளம்புதி. |
|
|
|