| குடில, | | ஆண்டகை யறியா ததுவென்? இன்று மாண்டவர் போக மீண்டவ ரேனும் |
| 95. | மாளா வழிநீ யாளா யென்னக் கைகுவிப்ப தேயலாற் செய்வகை யறியா அடியே னென்சொல! ஆஆ! விடியில் வாளா மாளும் மனிதர் தொகுதி யெண்ணி யெண்ணி யெரிகிற தென்னுளம். |
| 100. | எண்ணுதி கருணை! இவர்க்குள் தாய்க்கொரு புதல்வராய் வந்த பொருநரெத் தனையோ? வதுவை முற்றுறா வயவரெத் தனையோ? புதுமணம் புரிந்த புருடரெத் தனையோ? நொந்த சூலினர் நோவுபா ராது |
| 105. | வந்திவ ணடைந்த மள்ளரெத் தனையோ? தாய்முகம் வருந்தல் கண்டழுந் தன்சிறு சேய்முக மறவாச் செருநரெத் தனையோ? செயிருற முழந்தாள் சேர்ந்தழு பாலரைத் துயிலிடைத் துறந்த சூரரெத் தனையோ? |
| புரு. | 110. | சரி, சரி! இவையுன் னரசர்க் காங்கு சாற்றா தொழிந் ததென்? |
| | போற்றான் யார்சொலும் புந்தியுஞ் சற்றும். அன்பிலன் : பிறர்படுந் துன்பஞ் சிறிதும் அறியா வெறியன். அன்பொ டிம்மாலை |
| 115. | குறியா நீவிடு தூதையுங் கொண்டிலன். அண்டிய ஜீவ ராசிக ளனைத்தையும் மண்டம ரிதில்நின் வைவாள் தனக்கே யிரையிட லொன்றே விரதமாக் கொண்டனன். பித்த னொருவன் தன்னா லித்தமிழ். |
| 120. | நாடெலாம் வெறுஞ்சுடு காடாய் விடுமே. ஆவ! இப்பெரும் பாவமும் பழியும் அஞ்சினேன் ; அஞ்சினேன்! எஞ்சலில் கருணை யுருவே! அடியேற் கொருமொழி தருவையேல் ஒருவர்க் கேனு முறுதுய ரின்றி |
|
|
|