பக்கம் எண் :

மனோன்மணீயம்
155

125.

அரசனும் புரிசையு மரைநொடிப் போதிலுன்
காதல மாமொரு கௌசலம்,
காட்டுகே னடியேன் கேட்டரு ளரசே! 

(1)

(நிலைமண்டில ஆசிரியப்பா.)


புரு.(தனதுள்)பாதகா! விசுவாச காதகா!

ஆ! ஹா! (சிரித்து)


குடில,அரசன் கைப்படி லாங்குளார் யாருமென்
130.

உரைதவ றாதுன் குடைக்கீ ழொதுங்குவர்.
மங்கல மதுரையு மிங்கிவர் வழியே
யுன்னா ணைக்கீ ழொதுங்குதல் திண்ணம்.
தொல்புவி தோற்றியது தொட்டா சுரிமை
மல்கிய புவியிஃததனால், “மன்னவன்”

135.

என்றபே ரொன்றுநீ யீவையே லென்றும்,
நின்னாணை யின்கீழ் நின்றுநீ முன்னர்
வேண்டிய தாரொடு நீருமே யன்றிமற்
றீண்டுள எவையே யாயினும் வேண்டிடில்,
சிரமேற் சுமந்துன் முரசா ரனந்தைக்

140.

கோயில் வாயிலிற் கொணர்ந்துன் திருவடி
கண்டுமீள் வதுவே கதியடி யேற்காம்.
பண்டிரா கவன்றன் பழம்பகை செற்று
வென்றதோ ரிலங்கை விபீஷணன் காத்தவர
றின்றுநீ வென்றநா டினிதுகாத் திடுவேன்.


புரு.145.சமர்த்தன் மெத்தவும்! அமைத்ததந் திரமென்?

குடில,

அரசன தந்தப் புரமது சேர
யாவரு மறியா மேவருஞ் சுருங்கை
ஒன்றுள தவ்வழி சென்றிடி லக்கணங்
கைதவன் கைதியா யெய்துவ னுன்னடி.


புரு.150.

உண்மை?

(சேவகனை நோக்கி)

யாரது!


குடில,

உதியன் கண்முன்

மெய்ம்மை யலாதெவர் விளம்புவர்?

(அருள்வரதன் வர)