பக்கம் எண் :

மனோன்மணீயம்
165

45.

கொலுவோ கொல்லிது! மணவறை! இருமின்.
பலதேவ ரேநும் பிதாவிது காறும்.
வந்தில ரென்னை?


பலதேவன்.

மன்னவர் மன்ன!


அந்தியிற் கண்டே னடியேன். அதன்பின்
ஒருவருங் கண்டிலர். தனிபோ யினராம்.


ஜீவ, 50.

இருமிரும் நீரும். எங்கே கினுநங்
காரிய மேயவர் கருத்தெப் பொழுதும்.


(நாராயணனை நோக்கி).பாரீ ரவர்படும் பாடு!

நாராயணன்.

பார்ப்பேன்!


சத்தியஞ் சயிக்குமேற் சாற்றிய படியே!


ஜீவ,இத்தகை யுழைப்போ ரெப்புவ னமுமிலை.

55.

எண்ணிநிச் சயித்த இத்தொழி லினியாம்
பண்ணற் கென்தடை? சுவாமி! அடிகள்
தந்தநன் முகூர்த்தம் வந்ததோ?


சுந்தர,

வந்தது!


(புருடோத்தமனும், குடிலனும், அருள்வரதன் முதலிய
மெய்க்காப்பாளருடன் கற்படை வழி வர.)


புருடோத்தமன்.

நின்மின்! நின்மின்! பாதகன் பத்திரம்!


(கற்படையில் அருள்
வரதனை நோக்கி)

என்பின் னிருவர் வருக.


(தனதுள்)

இதுவென்?


60.

இந்நிசி யெத்தனை விளக்கு! ஏதோ
மன்னவை போலும்! மந்திரா லோசனை!
இவர்சுந் தரரே! அவர்நட ராஜர்!
இவர்களில் குளரோ! எய்திய தெவ்வழி?
இத்திரை யெதற்கோ? அத்திரை யெதற்கோ?


65.

இத்தனை கோலா கலமென் சபைக்கு?
மாலையுங் கோலமுங் காணின் மணவறை
போலாம். அறிந்தினிப் போவதே நன்மை.
மந்திர மாயின் மற்றது மறிவோம்.