பக்கம் எண் :

மனோன்மணீயம்
164

2-ம் படை.  வருத்தமே னுனக்கு? மன்னன் திருவுளக்
கருத்தனு சரித்துநாங் காட்டலே கடமை.

(3-ம் படைஞன் மீண்டு வர)

3-ம் படை.  இப்புறம் வருதி. செப்புவன் ரகசியம்.
(முதற்படை  சத்தியஞ் செய்தபின் சாற்றினன். நீயும்
நோக்கி)   25. எத்திறத் தோர்க்கு மியம்பலை. பத்தரம்!
அத்திரை மணத்திற் கன்றுமற் றப்புறம்
நெருங்கிய சுரு்கையொன் றுளதாம். அவ்வழி
செல்லில் வெகுதொலை செலுமாம். இப்போர்
வெல்லும் வரையு மவ்வுழி மணந்தோர்.
30. இருவரு மெய்திவாழ்ந் திருப்பராம்.
முதற்படை, 

சரி! சரி!

பொருவரும் புத்திமான் குடிலன். எத்தனை
விரைவினிற் சமைத்தான்! வெகுதிற முடையான்.
3-ம் படை.  இப்போ தன்றது ; நகரா ரம்பம்
எப்போ தப்போ தேவருந் துயரங்
 35. கருதிமுன் செய்தனன்.
முதற்படை, 

ஒருவரு மறிந்திலம்!

(முருகன் வர)

3-ம் படை.  யாரது? முருகனோ? நாரண னெங்கே?
முருகன்.  நாரண னப்புறம் போயினன் ; வருவன்.
3-ம் படை. பிழைத்தீ ரிம்முறை.
முருகன். 

பிழைத்தில மென்றும்!

3-ம் படை.  அத்திரைச் செய்தி யறிவாய். வைத்ததார்?
முருகன்.  40.வைத்ததா ராயினென்? வெந்தது வீடு!

(இருவரும் நகைக்க)

2-ம் படை.  வாயினை மூடுமின். வந்தனன் மணமகன்.
முருகன்.  ஈயோ வாயி லேறிட நாயே!
முதற்படை,  அரசனு முனிவரு மதோவரு கின்றார்!

(ஜீவகன், சுந்தரமுனிவர், கருணாகரர்.நிஷ்டாபரர், பலதேவன், நடராஜன், நாராயணன் முதலியோர் வர)

ஜீவகன். 

இருமி னிருமின்! நமர்காள் யாரும்!

(ஜீவகன் முனிவர் முதலியோர் தத்தம் இடத்திருக்க)