முதற்படைத் தலைவன். | | அடிகள்பின் போயினர் யாவர்? அறிவீர்? |
2-ம் படை. | | நடரா சனைநீ ரறியீர் போலும்! |
முதற்படை. | | அறிவேன். ஆ! ஆ! அரிவையர் யாரே |
| | வெறிகொளார் காணில்! வீணில் வாணியைக் |
| | |
| 5. | கெடுத்தான் கிழவன். |
3-ம் படை. | | அடுத்ததம் மணமும்! |
| | தெரியீர் போலும்! |
முதற்படை. | | தெரியேன். செய்தியென்? |
3-ம் படை. | | கோணிலா நாரணன் கொடுஞ்சிறை தவிர்த்தலும் |
| | வாணியின் மனப்படி மன்றல் நடத்தலும் |
| | இவ்வர மிரண்டு மம்மணி வேண்ட |
| | |
| 10. | அளித்தன னனுமதி களிப்புட னரசன். |
முதற்படை. | | இருதிரை யிட்டவா றிப்போ தறிந்தேன். |
| | ஒருதிரை வாணிக் கொருதிரை மணிக்கே. |
3-ம் படை. | | எத்திரை தாய்க்கென் றியம்புதி. கேட்போம். |
முதற்படை. | | இத்திரை தாய்க்காம். |
3-ம் படை. | | சீ! சீ! அத்திரை. |
| | |
2-ம் படை. | 15. | எத்திரை யாயினென்? ஏனிரை கின்றீர்? |
முதற்படை. | | இருதிரை வந்தவா றிதுவே யாயினும் |
| | ஒருதிரைக் கொருதிரை யெத்தனை தூரம்? |
3-ம் படை. | | அதோஅவ னறிகுவன். அறிந்திதோ வருவேன். |
| | (3- ம் படைஞன் மற்றோரிடம் போக) |
முதற்படை. | | ஐயோ! பொய்யறும் அன்னையம் மணிக்கும் |
| | |
| 20. | பொய்யன் பலதே வனுக்குமோ பொருத்தம்? |