பக்கம் எண் :

மனோன்மணீயம்
162

வாணி,

ஆயிடிற் கேட்குதி யம்மணி! என்சூள்.
கண்டவர்க் கெல்லாம் பண்டைய வடிவாய்
நீயிவ ணிருக்க நின்னுளம் வாரி

150.

வெள்ளிலா மெள்ள விழுங்கி யிங்ஙனம்
வேதகஞ் செய்த போதக யூதபம்,
பேரிலா வூரிலாப் பெரியோ னவன்றான்
யாரே யாயினு மாகுக, அவனைநீ
யணைநா ளடியேன் மணநாள். அன்றேல்,

155.

இணையிலா உன்னடிக் கின்றுபோ லென்றும்
பணிசெயப் பெறுவதே பாக்கிய மெனக்கு.
கடமையும் பிறவுங் கற்றறி யேன்விடை
மடமையே யாயினு மறுக்கலை மணியே!


மனோன்,பேதைமை யன்றோ வோதிய சபதம்?
160.

ஏதிது வாணி! என்மணந் தனக்கோ,
இனியரை நாழிகை. இதற்கு ளாவதென்?
அன்பின் பெருக்கா லறைந்தனை போலும்.
மன்பதை யுலகம் வாஞ்சா வசமே.


வாணி.

உடலலா லுயிரும் விழியலா லுணர்வுங்

165.கடபட சடமலாற் கடவுளு மிலையேல்
வேண்டிய விளைக! விசனமென்? அன்றேற்
காண்டியவ் வேளை கருணையி னியல்பே.
(1)

(இருவரும் போக.)


ஐந்தாம் அங்கம் : இரண்டாம் களம்

முற்றிற்று.