பக்கம் எண் :

மனோன்மணீயம்
161

115.

மனக்களங் கங்களாம் மாசுக ளனைத்துந்
தேய்த்தவை மாற்றித் திகழொளி யேற்றி
மண்ணிய மணியாப் பண்ணிட என்றே
வைத்தவிக் கடிய வாழ்க்கையாஞ் சாணையை
பைத்தபூஞ் சேக்கையாப் பாவித் துறங்க

120.

யத்தனஞ் செய்திடு மேழையர் போல,
என்னநீ யெண்ணினை! வாணி! இந்தச்
சுகவிருப் பேநமைத் தொழும்புசெய் பந்தம்.
தவமே சுபகரம். தவமென்? உணருவை?
உடுப்பவை யுண்பவை விடுத்தர ணடைந்து

125.

செந்தீ யைந்திடைச் செறிந்தமைந் துறைதல்
ஆதியா வோதுப வல்ல. அவற்றைத்
தீதறு தவமெனச் செப்பிடார் மேலோர்.
இவ்வுயிர் வாழ்க்கையி லியைந்திடுந் துயரம்,
ஐயோ! போதா தென்றோ அன்னோர்

130.

போனகந் துறந்து கானகம் புகுந்து
தீயிடை நின்று சாவடை கின்றார்?
தந்தைதா யாதியா வந்ததன் குடும்ப
பந்தபா ரத்தினைப் பேணித் தனது
சொந்தமா மிச்சைகள் துறந்து மற்றவர்க்

135.

கெந்தநா ளுஞ்சுக மியைந்திடக் கடமையின்
முந்துகின் றவரே முதற்றவ முனிவர்.


வாணி,

அத்தகைத் தவமிங் கடியேன் தனக்கும்
ஒத்ததே யன்றோ?


மனோன்,

ஒத்ததே யார்க்கும்.

மேம்படக் கருதிடி லோம்புதி நீயும்.

140.

அடுத்தவர் துயர்கெடுத் தளித்தலே யானிங்கு
எடுத்தநற் றவத்தி னிலக்கண மாதலின்,
நடேசனை நச்சுநின் நன்மண மதுவும்
விடாதெனை யடுத்த வீரநா ரணன்றன்
கடுஞ்சிறை தவிர்த்தலுங் கடனெனக் கருதி

145.

யெழுதினேன். இஃதோ! வழுதியு மிசைந்தான்.
என்கட னிதுவரை : இனியுன் னிச்சை.