பக்கம் எண் :

மனோன்மணீயம்
172

இருமனம் ஏனினி? என்றுமிப் படியே
மருகனு மகளும் வாழ்க! வாழ்த் துதியே.


ஜீவ,கண்மணீ! அதற்குட் கண்வளர்ந் தனையோ!

230.

உன்னையு மறந்துறங் குதியே லினிமேல்
என்னையெங் கெண்ணுவை? இறும்பூ திருவரும்
ஒருவரை யொருவ ருணர்ந்தமை!


(மனோன்மணி : திடுக்கிட்டுவிழிக்க)


வெருவலை! மணியே! பிரியீ ரினியே.

 (3)


(வாழ்த்து-மருட்பா)


பள்ள வுவர்க்கடலிற் பாய்ந்தோடும் வெள்ளமென
உள்ள முவந்தோடி யொன்றானாய்-விள்ளா
மணியின தொளியும் மலரது மணமும்
அணிபெறு மொழியி னருத்தமும் போல,
இந்நிசி யாகவெஞ் ஞான்றும்
மன்னிய அன்புடன் வாழ்மதி சிறந்தே!


(யாவரும் வாழ்த்த)


ஐந்தாம் அங்கம் : மூன்றாங்களம்
முற்றிற்று.


கலித்துறை


சிறிதா யினும்பற் றிலாதுகை யற்ற திருமகடன்
குறியாந் தலைவன் குடிலன்பின் னெய்திய கொள்கைகண்டீர்
அறிவா மெனுநம் மகங்கர மாறு மவத்தையினிற்
செறிவா யிருக்குந் திருக்கு வெளிப்படுஞ் சீரிதுவே.


ஐந்தாம் அங்கம்
முற்றிற்று.